ஏறக்குறைய ஒரே தன்மையாக இருந்து வருகின்றன. உணர்ச்சிகளின் காரணங்களும் அவற்றை எய்தும் முறைகளும் மனிதர்க்கு மனிதர் வேறுபட்டிருக்கலாம்; உணர்ச்சிகள் ஒரே தன்மையாக உள்ளன எனலாம். வீரம், காதல், இரக்கம் முதலிய உணர்ச்சிகள் வெவ்வேறு காரணங்களால் வெவ்வேறு சூழ்நிலையில் பிறக்கலாம். ஆயினும், அந்த உணர்ச்சிகள் எல்லாக் காலத்தார்க்கும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக உள்ள உணர்ச்சிகளே ஆகும்.* பொருந்துவன, நல்லன. எல்லா உணர்ச்சியும் நல்லன என்று கொள்ள முடியாது. அறிவில் குறை இருப்பது போலவே உணர்ச்சியிலும் குறை உண்டு. அறிவால் தவறுகள் நேர்தல் போலவே, உணர்ச்சியால் கேடுகள் நேர்தலும் உண்டு. ஆயினும் எண்ணும் ஆற்றால் உண்மை வழிகள் கண்டு அறிவு திருந்துதல் போலவே, வாழ்க்கைக்கு இயைந்த பண்பாடான வழிகளை உதவியும் பயனும் உள்ள வழிகளைக் கண்டு உணர்ச்சியும் திருந்தி வந்துள்ளது.+ அத்தகைய உணர்ச்சிகள இலக்கியத்தில் அமையத்தக்கனவே அல்லாமல், கொலைக்கும் கொள்ளைக்கும் காரணமான உணர்ச்சிகள் தக்கன அல்ல. _________________________________________________ * At the level of the emotions and the appetites we are all very much alike. Contemporary human beings when hating and loving differ very little among themselves. More- over, they differ very little from human beings hating and loving in the paleolithic age. It is only at the level of the intellect that difference emerge. -C.E.M. Joad, Guide to Modern Thought, p.256. + The history of emotion has been as much a record of disaster as the history of reason has been a record of error. It is only slowly that emotion found out the useful and guiding ways, the illuminating, the humanizing ways of life; just as slowly reason found out its true methods in thought. - G.E. Woodberry, The Inspiration of Poetry, p.244 |