பக்கம் எண் :

உணர்ச்சி 65

Untitled Document

ஐவகை

          பின்வரும்    ஐந்து வகையாக  அமைந்த உணர்ச்சிகளை
உடைய இலக்கியம் நெடிது வாழும் என வின்செஸ்டர் கருதுகிறார்:- *

     1. நியாயமான,    தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல
       வகையில் அமைவது.

     2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை
        ஒட்டியது, ஆழம் உடையது.

     3. தொடர்ந்து    ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி: பொருந்
        தாததும்    வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது;
        வலிந்து கொண்டுவரப்படாமல் இயல்பாக அமைவது.

     4. வாழ்க்கையின்    பல கோணங்களை விளக்குமாறு பலவகை
        உணர்ச்சிகள் கூடி அமைதல்.

     5. மிக விழுமிய  உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரண
      மாகவோ,   புலனின்பம். காரணமாகவோ, அமையும் உணர்ச்சி
      களைவிட   உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத்
      தின் காரணமாகவோ அமைதல்.


     எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர
     ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
     கொள்ளை மேவலை....
                                   -புறநானூறு, -7.

     கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
     வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
     பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்;
     புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
     வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்;
     தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து.. 
                                   -புறநானூறு, -15.

  * C.T. Winchestor Some Principles of Literary Criticism, p.52.