அதனால்தான் கலைத்துறையில் இன்பம் போற்றப்படும் அளவிற்குத் துன்பமும் போற்றப்படுகிறது; சிறந்த தலைவன்(hero) இடம் பெறும் அளவிற்குக் கயவனும்(villain) இடம் பெறுகின்றான். வடிவிலும் பொருளிலும் பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர், பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; அல்லது பாட்டின் பொருளிலும் அமைக் கலாம். பாட்டின் ஒலிநயத்திலும் நடையிலும் உணர்ச்சி புலப்படச் செய்தல் வடிவத்தில் அமைத்தல் ஆகும். பாட்டின் சொற் பொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை அமைத்தலே, அதன் வடிவத்தில் அமைத்தலை விடச் சிறந்தது என்பர் அறிஞர்.** உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறப்புடையது ஆகும்.
வாய்முத்தம் தாராமல் மழலையுரை யாடாமல் சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்தைதடு மாறுதையா முகம்பார்த்துப் பேசாமல் முலைப்பாலும் உண்ணாமல் மகன்கிடக்கும் கிடைகண்டு மனம்பொறுக்கு தில்லைஐயா. நீடும் மதியினைப்போல் நிலவெறிக்கும் செல்வமுகம் வாடிநிறம் மாறியதென் வயிற்றில்எரி மூட்டுதையா. பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூச் சூட்டிடம்மா’ என்னும் மொழிகள்இனி எக்காலம் கேட்பன்ஐயா நெஞ்சில் கவலையெல்லாம் நிற்காமல் ஓட்டும் அந்தப் புஞ்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா* ** C.T. Winchestor, Some Principles of Literary criticism, p.103 * ஆசிய சோதி, 'மலரும் மாலையும்.' |