என்று மகன் இழந்த தாய் புத்தரிடம் முறையிடுவதாகத் தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள பாட்டுகள் துயர உணர்ச்சிக்கு ஏற்ற சொற்களும் வடிவும் பெற்ற அமைந்திருத்தலைக் காணலாம். சுட்டது குரங்கெரி சூறை-யாடிடக் கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்த தெங்கணும் இட்டதிவ் வரியணை இருந்த தென்னுடல். ஊறுகின் றனகிண றுதிரம் ஒண்ணகர் ஆறுகின் றலதனல் அகிலும் நாவியும் கூறுமங் கையர்நறுங் கூந்த லின்சுறு நாறுகின் றதுநுகர்ந் திருத்தும் நாமெலாம்** என்னும் பாட்டுகளிலும் உணர்ச்சிக்கு ஏற்ற சொற்களும் வடிவும் அமைந்திருத்தலை உணரலாம். மூவர் உணர்ச்சி இலக்கியத்தில் உணர்ச்சி மூவரிடம் உள்ளது; மூவருடைய உணர்ச்சியும் ஒன்றுபடும்போது ஓர் இன்பம் உளதாகிறது. இலக்கியம் இயற்றிய புலவரின் உணர்ச்சி, அதில் வரும் கற்பனை மாந்தரின் உணர்ச்சி, அதைக் கற்பவர் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றுஉள்ளன. புலவரின் உணர்ச்சியைக் கற்பனை மாந்தரிடம் கண்டுஅதையே கற்பவரும் உணர்தலே, மூவகை உணர்ச்சியும் ஒன்றுதலாகும்,* கற்பவரிடத்தில் இயல்பாகவே சிலவற்றில் விருப்பும் சிலவற்றில் வெறுப்புமாக உணர்ச்சிகள் வளர்ந்திருக்கும். அவற்றைத் தக்கவாறு வெளிப்படுத்தும் திறன் இல்லாமல் அவர் ** கம்பராமாயணம் , உயுத்த காண்டம், மந்திரப் படலம், 1-13. * Sanskrit writers recognize not only the emotion of the spectator and the reader but also the emotion of the mastermind of poet, the characters and the actor and they proceed to equate the emotion of all these. -A.Sankaran, Some Aspects of Literary Criticism in Sanskrit p.97 |