பக்கம் எண் :

72இலக்கியத் திறன்

Untitled Document

          அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய
         தம்நோய்போல் போற்றாக் கடை.


           இவ்வாறு மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல்
உணரும்    உணர்ச்சி, அறிவால் ஏற்படுவது என்று கூறுவதற்கு இடம்
இல்லை     எனினும்,  அறிவு நிறைந்த மக்களின் வாழ்க்கையிலேயே
அவ்வுணர்ச்சி   உள்ளது     என்பது     தெளிவு.  அறிவு குறைந்த 
விலங்குகளிடத்திலோ     பறவைகளிடத்திலோ  அத்தகைய உணர்ச்சி
இல்லை.     அவ்வாறு     உணரும்    உணர்ச்சியால், பிற உயிரின்
துன்பத்தை   மட்டும்   அல்லாமல்  பிற உயிரின் இன்பத்தையும் தன்
இன்பம் போல்உணர்ந்து    மகிழ     முடிகிறது. மக்களிடத்தில் கூடி
மகிழும் ஆற்றல்    மிகுந்திருக்கும், ஒருவர் சிரித்தால் மற்றவர் முகம்
மலர்வதற்கும் காரணம் இதுவே.

       பிற உயிரின்  இன்ப துன்பத்தைத் தன் இன்ப துன்பம் போல் 
உணரும்    இந்த உணர்ச்சியை ஒத்துணர்வு (Sympathetic feeling)
எனக் குறிப்பர்.      இது     கலைஞரிடத்தில் சிறந்து விளங்குகிறது.
இதனால்தான்,      புலவர் தம்    துன்பத்தைப் பாடுவதோடு மட்டும்
அல்லாமல்,      மற்றவர்கள்  உறும் துன்பத்தையும் கற்பனை செய்து
பாடவல்லவராக    விளங்குகிறார்.      புறநானூற்றில் பெரும்பாலான
பாட்டுகள்      புலவர் தம் இன்ப துன்பத்தைப் பாடியன. அகநானூறு
முதலிய     அகப்பொருட் பாட்டுகளில்  உள்ளவை புலவரின் சொந்த
இன்பதுன்ப    உணர்ச்சிகள் அல்ல;  அவை புலவர் கற்பனை செய்த
காதலர்    முதலானோரின்      இன்பதுன்ப    உணர்ச்சிகள்; உலக
வாழ்க்கையில்    பிறர்    உற்ற இன்ப துன்பங்களை எல்லாம் புலவர்
தாம் உணர்ந்து,    அவற்றை    நாடகப் போக்கில் கற்பனை மாந்தர்
வாயிலாக      உணர்த்தியுள்ளனர்.   சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
முதலிய     காவியங்களில்    தலைவன்    தலைவி   முதலோரின்
இன்பதுன்பமாகப்     பாடப்    படுவனவும் புலவரின் கற்பனைகளே.
அவற்றைப்     பாடும் புலவர், அத்தனை இன்பதுன்பமும் தம் இன்ப
துன்பம் போல்     உணர்ந்த திறத்தால்தான் பாடமுடிந்தது. ஆகவே
இந்த ஒத்துணர்வு    தான் நாடகப் பாட்டுகளும் (dramatic poetry)
காவியங்களும்    எழுதக்   கலைஞர்க்கு உதவியாக இருப்பது. கதை
முதலியன எழுதுவதற்கும் உதவுவது இதுவே.
         "குருவி ஒன்று என் சன்னலின் எதிரே வருமானால், அதன்
வாழ்வில்     யான்    ஒன்றிவிடுகிறேன்.    கொத்தித்   தின்னவும்