பக்கம் எண் :

உணர்ச்சி 73

Untitled Document

தொடங்குகிறேன்"    என்கிறார்    கவிஞர்   கீட்ஸ், கவிஞரால் பிற
உயிரின் வாழ்வில் எவ்வளவு ஒன்றி உணர முடிகிறது என்பதற்கு இது
எடுத்துக்காட்டாகும்.*

கூடுவிட்டுக் கூடுபாய்தல்

         பாட்டைப் பாடும் புலவர்க்கு மட்டும் அல்லாமல், எல்லாக்
கலைஞர்க்குமே      இத்தகைய  ஒத்துணர்வு உண்டு. தாம் காணும்
குருவி காக்கை     முதலிய   எல்லாவற்றினுடைய உணர்ச்சிகளிலும்
ஒன்றிப் போகும்     உள்ளம்   கலைஞர்க்கு இயற்கையாக உள்ளது.
அந்த      ஒன்றிய     உள்ளத்தோடு    அவர்கள்    கலையைப்
படைப்பதால்தான்,      அவர்கள்      படைக்கும்  கலையில் நாம்
அவர்களின்    உணர்ச்சியையே காண முடிகிறது. ஓவியம் எழுதுகிற
கலைஞன் ஒருவன், அந்த ஓவியமாகவே ஆகிவிடுவதால்தான் அதை
எழுத முடிகிறது     என்கிறார் கவிஞர் தாந்தே.**   நாடகம் எழுதும்
புலவரும் தாம்     அந்த அந்த நாடக மாந்தராக மறிவிடுவதால்தான்,
அத்தனை     மாந்தர்களின்     உணர்ச்சிகளையும்    புலப்படுத்தி
நாடகத்தைப்     படைக்க முடிகிறது. நாடகத்தின் தலைவன் தலைவி
கொடியோர்    ஏவலாளர் முதலான அத்தனை மாந்தராகவும் மாறும்
உள்ளம்     பெற்றவரே    நாடகம் படைக்க முடியும். தொடர்கதை
முதலானவற்றைப்     படைக்கும்   போதும் இந்த ஒன்றிய உள்ளம்
இன்றியமையாதது.     கவிஞர்கள் மற்றவர்களைவிட அறிவில் சிறந்த
சான்றோர்   அல்லர் என்றும்,  ஆனால் ஒருவகை இயல்பு அல்லது
திறன் அமைந்திருப்பதால்  அவர்கள் மிக்க ஆர்வம் உடையவராய்ப்
பாட்டைப்    படைத்துத்தர   முடிகிறது  என்றும் சாக்ரடிஸ் கூறியது.


    * Keats had the imoulse to interest himself in every
thing he saw or  heard of, to be curious about a thing,
accept it,   identify  himself with it, without first asking
whether it is better  or worse then another, or how far
it is from the ideal principle. It is this impulse that speaks
in the words,   "If a sparrow come before my window,
I take part in its existence and pick about the gravel"

    -A.C Bradle, Oxford Lectures on Poetry, p 238.

     ** Who paints a figure, if he cannot be it, cannot
drawt - Dante.