பக்கம் எண் :

74இலக்கியத் திறன்

Untitled Document

இங்கும் கருதத்தக்கது.*  மிக்க     ஆர்வம் என்று அவர் குறித்தது
இவ்வாறு பிற    உயிர்களின்   உணர்ச்சிகளைத் தம்முடையனவாகக்
கொண்டு மாறி     ஒன்றும்   உள்ளமே   எனலாம். இவ்வாறு மற்ற 
உயிரின்   இன்பதுன்பத்தை   மாறிப்   புக்கு எய்தும் திறன் - ஒத்து
ணர்வு-ஒருவகையில்  கூடுவிட்டுக்    கூடு பாயும் கலையாக உள்ளது.
கலைஞரின் உணர்ச்சிக்கு சிறப்பியல்பு இது.

           இந்த   ஒத்துணர்வு     என்பது    கலைஞர்களுக்குச்
சிறப்பியல்பாயினும்,         கலையை     நுகர்வார்க்கும்     இது
இன்றியமையாததாகும்.     கலையை       ஆராய்வார்க்கும்   இது
வேண்டியதே.    கலைத் தொடர்பு   இல்லாத  மற்ற மாந்தரிடத்தும்
இது. ஓரளவு    உள்ளதே  ஆகும். அதனால்தான் இதுவரை நாடகம்
பார்த்திராதவர்களும்     இன்று     புதிதாக     ஒரு     நாடகம்
பார்ப்பார்களானால்  அழுகைக்கும் உவகைக்கும்  ஆளாகிக் கண்ணீர 
வடித்தும் சிரித்தும்   நாடகத்தை  அனுபவிக்கின்றனர். இவ்வாறு இது
பலரிடத்திலும்   இருந்த   போதிலும்,    கலைஞரிடத்தில் மிகுதியாக
உள்ளது எனலாம்.

அடிப்படை அமைப்பு

          இது    பலரிடத்தும் காணப்படுவதற்குக் காரணம் என்ன?
இது   அன்பையும்   இரக்கத்தையும்    அடிப்படையாகக் கொண்டு
வளர்ந்த   உணர்வாக இருத்தலே காரணம் ஆகும். அன்பு தொடர்பு
உடையவரிடத்துப்     பிறக்கும்   உணர்ச்சி;   இரக்கம்,   தொடர்பு
இல்லாதவரிடத்தும்    பிறக்கும்    உணர்ச்சி;   இவை இரண்டையும் 
அடிப்படையாகக்     கொண்டு     கலைத்  துறையில்     வளரும்
ஒத்துணர்வோ,      தொடர்பு     உடையார்   இல்லாதார்   என்ற
எல்லையும்        கடந்து     விரிவுடையதாகின்றது.    உயிரோடு
இருப்பவரிடத்து        மட்டும்     அல்லாமல்,   இறந்தவரிடத்தும்
ஒத்துணர்வு    பிறக்கும்;   பல நூற்றாண்டுகளுக்கு    முன் வாழ்ந்து
மறைந்தவரிடத்தும்   பிறக்கும்;   இந்த   உலகத்தில் என்றும் பிறந்து
வாழாத        கற்பனை   மாந்தரிடத்தும்   பிறக்கும்:   உயிருள்ள


      * "I soon found out" he (Socrates) said, that poets do
not compose   poetry because they are wise, but because
they have  ascertain nature or genius, which is capable of enthusiasm."
      -L. Abercrombie, Principles of Literary Criticism p, 8