பக்கம் எண் :

76இலக்கியத் திறன்

Untitled Document

உள்ளத்து    உணர்ச்சியைப் பாடமுடிகிறது. பாடிய புலவர் விளக்கும்
உணர்ச்சியைப்     பாட்டைப்   படிப்பவர் பெறுவதற்குக் காரணமும்
இதுவே.     மகனை  இழந்த தாய் புலம்புவதாக நாடகத்தில் காணும்
போது, சிறுவன்  ஒருவனுடைய உள்ளம் உருகுகிறது; கண்கள் கலங்கு
கின்றன.    அவனோ சிறுவன்; ஒரு தாயின் மன நிலையை எவ்வாறு
உணர முடிகிறது     எனின்,    அவன்  துன்ப உணர்ச்சியை வேறு
துறையில்    வேறு  வடிவில் பெற்றிருந்ததால், இந்தத் துன்பத்தையும்
உணர   முடிகிறது. அவன் தன் விளையாட்டுப் பொம்மையை இழந்து
வாடித்   துன்புற்றிருக்கலாம்; எவ்வாறோ துன்ப அனுபவம் முன்னமே
இருந்ததால்தான்    அவன் தாயின் துயரத்தை நாடகத்தில் கண்டதும்
கண் கலங்க முடிகிறது.

          உண்மையாக  நோக்குமிடத்து, வாழ்க்கையில் கலங்காமல்
கல்மனம்    பெற்றிருப்பவரும்  கலைத்துறையில் நெஞ்சம் நெக்குருகி
நிற்கின்றனர்.     செய்தித்தாளில்     படிக்கும்     பூகம்ப  அழிவு
முதலியவற்றிற்காக    நெகிழ்ந்து   இரங்குதலைவிட, பெரும்பாலோர்
ஒரு    தொடர்கதையில்     வரும் கற்பனை மாந்தர்க்காகக் கலங்கி
வருந்துதல்     மிகுதி   என     வின்செஸ்டர்   என்னும் அறிஞர்
கூறியுள்ளார்.*

          கலையை   நுகர்வோரின்  மன நிலையே இவ்வாறெனின்
கலையைப்     படைப்போராகிய    கலைஞரின்   மனநிலை பற்றிக்
கூறுதல்    வேண்டா. அவர்கள் உணர்ச்சியுருவாக நின்று பிறவுயிரின்
துன்பத்தை  உணர்தலால்தான் படிப்பவரின் உள்ளத்தை உருக்கவல்ல
பாட்டு முதலியவற்றை இயற்றல் முடிகின்றது.

          சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

         காதலன்  வெளியூர்க்குப்  பிரிந்து   சென்ற பிறகு காதலி
அவனுடைய   வரவை   நினைந்து   ஏங்குகிறாள்.  அவன் திரும்பி
வருவதாகக்   கூறிச்   சென்ற   பருவமும்   வந்துவிட்டது.  அவன்
பிரிந்துசென்ற   நாட்களைச்   சுவரில்   குறித்து  வைத்து அவற்றை
நோக்கி நோக்கிக்    கண்ணீர்   விட்டபடியே,  படுக்கையில் கிடந்து
வருகிறாள்.   அப்போது  பல்லி சொல்வது கேட்டு, "பல்லி! உன்னை


    * C.T. Winchester,Some Principles of Literary Criticism, p. 17.