பக்கம் எண் :

80இலக்கியத் திறன்

Untitled Document

மனக்  கண்ணால்    அவன்  அந்தக் கற்பனைக் காட்சியைக் கண்டு
உள்ளம்    உருகிக்   கண்ணீர்  வடிப்பான். ஆகவே உண்மையான
துன்பம்   வந்து   தாக்குவதால் மற்றவர்கள் கண்ணீர் வடிக்க, கலை
மனம் உடையவன் கற்பனைத் துன்பத்தாலும் கண்ணீர் வடிக்கின்றான்.

விலங்குநிலை

       துன்பம் > தன் உடல் > தன் கண்ணீர்

மனித நிலை

      துன்பம் > தன் உடல் > தன் கண்ணீர்
      துன்பம்-> பிறர் தன் உடல் > பிறர் கண்ணீர்
      தன் கண்ணீர்

கலை நிலை

      கண்ணீர் > துன்ப உணர்ச்சி > கலைஞர் கற்பனை >
      கலை வடிவம் > கற்பவரின் கற்பனை > கற்பவரின்
      துன்ப உணர்ச்சி > கண்ணீர்.

        துன்பத்திற்கு விளக்கமாகக் காட்டிய இதுவே இன்பத்திற்கும் பொருந்துவது   ஆகும்.   கலைத் துறையில் கலைஞனின் உணர்ச்சி
அவன்     உள்ளத்தில்   கற்பனையை  எழுப்ப, அது கலைவடிவம்
பெறுகிறது.    அந்தக்   கலைவடிவம் கற்பவரின் உள்ளத்தில் அதே
கற்பனையை   அமைத்து   உணர்ச்சியை விளைவிக்கின்றது.இவ்வாறு