| திறன். நினைத்தபோது அது வராது. காற்றே நீ வா என்று காற்றை அழைப்பது போன்றது அது. நான் பாட்டு இயற்றக்கருதும் பொருள் பற்றி ஒரு வரி எழுதுவதற்கு முன் ஆண்டுக்கணக்கில் எண்ணி எண்ணிக்கழித்திருக்கிறேன் என்று பைரன் என்ற ஆங்கிலக் கவிஞர் ஒரு முறை கூறினார்.* காற்று எங்கும் வீசுகிறது. ஆயினும், வண்டுகளால் துளைக்கப்பட்ட மூங்கில்களின் வழியாக வீசும்போதுதான் அது இனிய ஒலி எழுப்புகிறது; குழல் போல் ஒலிக்கிறது. அதுபோல், உலகம் முழுவதும் அழகு உள்ளது; இனிமை உள்ளது. ஆயின், நுட்பமான உணர்ச்சியும் அதை வெளிப்படுத்தும் திறனும் உள்ள சிலருடைய புலன்களில் பட்ட சில வேளைகளில் தான் அந்த அழகும் இனிமையும் கலை வடிவு கொள்கின்றன. வாழ்க்கை:கலை நேரிலே கண்ட நிகழ்ச்சியாலோ கற்பனையில் கண்ட காட்சியாலோ புலவரின் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது; அவருடைய பாட்டைப் படிப்போரின் உள்ளத்திலும் ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது; வாழ்க்கையில் பெறும் உணர்ச்சி அனுபவத்திற்கும் கலையில் பெறும் இந்த உணர்ச்சி அனுபவத்திற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? இல்லையா? இவ்வகையில் உளநூலார் இன்னும போதிய ஆராய்ச்சி செய்யவில்லை; உளநூலார் இன்னும் தக்க வளர்ச்சி பெறாத நிலையிலே உள்ளது எனலாம்.** வாழ்க்கையில் பகைவன்மேல் சீற்றம் கொள்கிறான் ஒருவன். நாடகத்தில் பகைவன்மேல் சீற்றம் கொள்வதாக நடிக்கிறான் ஒருவன். இருவகைச் சீற்றமும் ஒன்று எனக்கொள்ளல்
* Byron said to me;"Extempore Verse is nonsense: poetry is a distinct faculty-it won't come when called - you may as well whistle for a wind.. I have thought over most of my subjects for years before writing a line. -E.J. Tralawny, the Life of Percy Bpsshe Shelley,p.246. ** Psychology has only dealt with fringes of mind hitherto and the most accessible fringe on the side of sensation. -I.A. Richards, Principles of Literary Criticism, p.108.
|