பக்கம் எண் :

உணர்ச்சி 87

Untitled Document

நிகரானவை

         சார்லஸ்  டிக்கன்ஸ் என்னும் ஆங்கிலக் கதையாசிரியர் ஒரு
தொடர்கதை   எழுதி   வந்தபோது  ஒரு கொலையைப் பற்றிய இடம்
வந்ததாம்.     1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் இரவு
அந்தப்     பகுதியை     எழுதிக்   கொண்டிருந்தாராம்.   கொலை
நிகழ்ச்சியை     எழுதி முடித்தவுடன், அவருடைய மனம் அமைதியை
இழந்துவிட்டதாம்.    உறங்கச்  சென்றால் உறக்கமும் வரவில்லையாம்
வீட்டை     விட்டு   வெளியே  நடந்தாராம். வீட்டுக்குத் திரும்பிவர
இயலாமல்,     மறுநாள்     காலைச்    சிற்றுண்டி நேரம் வரையில்
தெருக்களில்     நடந்து     காலம்   கழித்தாராம்.*  ஒரு துயரமான
நிகழ்ச்சியை     எழுதியபோதும்,   உண்மையாக   நேர்ந்த   துயரம்
போலவே உணர்ந்து   மிகத்   துன்புற்றாராம். அன்று இரவு கலங்கிய 
கலக்கத்தால்,   முகம்  வீங்கிடவே, மறுநாள் வெளியே வர இயலாமல 
பிறர் கண்ணில்   படாதபடி  தம்  அறைக்குள்ளேயே இருந்து காலம்
கழித்தாராம்1. அந்த   ஆசிரியர் படைத்த கதை மாந்தர்க்காக அவர்
பட்ட       துன்பங்களையும்    ஆசிரியருடைய   மனைவி   மகப் 
பேற்றுக்காகப்   பட்ட   துன்பங்களையும்   ஒப்பிட்டால்,   ஆசிரியர்
பட்ட துன்பமே    மிகுதி என்றும், அவருடைய மன நோய் அவரைத்
திங்கள்   கணக்கில்   நோயுற்றுப்  படுக்கச் செய்து விட்டது என்றும்
பியர்சன் என்பவர் குறித்துள்ளார்2.

         ஆகவே    கலையுலகக்    கற்பனையில்   அனுபவிக்கும்
உணர்ச்சிகள்     வாழ்க்கையின்     உணர்ச்சிகளுக்கு  நிகரானவை
என்றும்,     நிகரல்ல    எனினும்  அடுத்தாற் போன்றவை என்றும்
கொள்ளலாம்.

வேறுபாடு

          வாழ்க்கையுணர்ச்சிகள் செயல்படத் தூண்டுவன; உடம்பின்
தசைநார்களை   இயக்குவன.  அதனால்தான் ஆற்றில் குதிப்பவனைத்
தடுக்க    ஓடுகிறோம்;    அல்லது     குரலெழுப்புகிறோம். ஆனால்


     * Henketh Pearson, Diokens, p. 156
     1. "I have undergone as much sorrow and agitation  as
if the thing were real, and have wakened up with it at night
I was obliged to lock myself in when I finished it yesterday,
for my face   was swollen for the time to twice its proper
size."
     2. Ibid. p. 187.