பக்கம் எண் :

88இலக்கியத் திறன்

Untitled Document

கற்பனையுணர்ச்சிகள்  செயல்படத் தூண்டாதவை; ஆகவே உடம்பின் தசைநார்களை இயக்காதவை.

          இந்த   இருவகை   உணர்ச்சிகளுக்கும் உள்ள வேறுபாடு,
அறிவற்ற     முரடனுடைய    உணர்ச்சிக்கும்,   நாகரிகம்  முதிர்ந்த
அறிஞனுடைய    உணர்ச்சிக்கும்   உள்ள    வேறுபாடு   போன்றது
அறிஞர்   ரிச்சர்ட்ஸ்.1  ஒரு கருவி  இயங்குவதை அறிஞன் பார்த்தே
தெரிந்துகொள்வான்.   அறிவு  குறைந்தவன் அதைத் தானே இயக்கிய
பிறகே  தெரிந்துகொள்வான்.   சிறுவன்   விரல்விட்டுக் கூட்டி அறிய
வேண்டிய   விடையை,   கணக்கறிந்தவன்   மனத்தாலேயே   கூட்டி
அறிகிறான்.   அறிவிலியும்   சிறுவனும்   புறத்தே   முயன்று பெறும்
அறிவை,   அறிஞன்   புற  முயற்சி இல்லாமலே அகத்தே எண்ணிப்
பெறுகிறான்.    அதுபோலவே,   வாழ்க்கையில்   புறத்தே உடம்பின்
அளவில்     பெருகி    அடையும்   உணர்ச்சிகளை,   கற்பனையில்
உள்ளத்தளவில்     அடைகின்றனர்    கலைஞர்2     வாழ்க்கையின்
உணர்ச்சிகள்    தசைநார்களையும்   தாக்கிச்   செயலுக்குத்  தூண்ட,
கற்பனையுணர்ச்சிகள்   நரம்புகளை   மட்டும்   தாக்கி   உள்ளத்தை
இயக்குகின்றன.     வாழ்க்கை     யுணர்ச்சிகள்,    உணர்ச்சிக்குரிய
பொருள்களும்   நிகழ்ச்சிகளும்   எதிரே  உண்மையாக  இருந்ததால்
ஏற்படுவன     அப்பொருள்களும்   நிகழ்ச்சிகளும்   இல்லாதபோது,
நினைப்பளவில்     எத்தகைய   உணர்ச்சிகள்   ஏற்படுமோ  அவை
கலையின்    கற்பனையில்   ஏற்படுகின்றன3   உணர்ச்சிக்கு   உரிய


      1. The difference between the intelligent of refined
and the stupid or ross person is difference in the extent
to which  over  action can be  replaced by incipient and
imagined action.
       -I.A. Richards, Principles of Literary Criticism, p.111.

     2. The absence of any over movements or external
sign of    emotion in an experienced reader of Poetry or
concert goer, compared to the evident disturbances which
are sometimes   to be seen in the novice, is no indication
of any of internal activity-Ibid.

     3. In a fully developed man   a state of   readiness
for  action will   take the place of   action when the full
appropriate situation far action is not  present. The essen-
tial   peculiarity of   poetry as of all the arts its that the
full appropriate situation   is not present,... So   readiness
for action takes the place of actual behaviour.

   -I.A.Richards Science and poetry, p.20