பொருள்களும் நிகழ்ச்சிகளும் எதிரே உள்ளபோது செயல் நிகழ்கிறது. ஆற்றில் குதிப்பவனைத் தடுக்க ஓடுதலும் குரலெழுப்புதலும் போல. உணர்ச்சிக்கு உரிய பொருள்களும் நிகழ்ச்சிகளும் உண்மையாக இல்லாமல், மனக் கண்ணில் (கற்பனையில்) காணும்போது, செயலுக்கு உரிய ஆயத்த நிலை (செயலுக்கு முந்தியநிலை) ஏற்படுகிறது திரைப்படத்தில் ஆற்றில் குதிப்பவனைக் காணும்போது நெஞ்சில் துணுக்குறுதல் போல. இத்தகையதே கலைஞர் பெறும் அனுபவமாகும். காலம் மாய்க்காது புலவர் ஓர் அனுபவத்தால் அதற்கு உரிய உணர்ச்சிகளை உறுகின்றார். அந்த உணர்ச்சிகளை உறும்போதே பாட்டு எழுதுகிறார் என்று கூறல் இயலாது. அப்போதே எழுதுவதும் உண்டு அந்நிலையினரை ஆசு கவி எனக் கூறுவர். அல்லது அந்த உணர்ச்சிகள் உள்ளத்தில் ஊறித் தெளியுமாறு விட்டு, சில நாள் அல்லது சில திங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்த பிறகும் எழுதுவதும் உண்டு. அவ்வாறு காலம் கழிந்தபின், உள்ளத்தில் பாட்டு எழுதுவது உண்டு என்று வோர்ட்ஸ்வொர்த் தம் அனுபவம் கொண்டு கூறியுள்ளார்.* அத்தகைய பாட்டு, 'மெல்லவே கரு இருந்து' எழுந்த பாட்டு எனலாம். ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் என்பவர் பாடிய கையறு நிலைப்பாட்டு ஒன்று. தம் நண்பர் ஆர்தர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழிந்தபின், அவருடைய பிரிவை நினைத்து இரங்கிப் பாடிய பாட்டு ஆகும். அந்தப் பதினேழு ஆண்டுகளில் அவருடைய உள்ளம் துயர உணர்ச்சியை மறந்து விடவில்லை. அந்தக் கால இடைவெளி, புலவரின் உள்ளத்தை * Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranqnillity; the emotion is contemplated till, by a species of reaction, the tranquillity gradually disappears, and an emotion, kindred to that which was before the subject of contemplation, his gradually produced, and does itself actually exist in the mind. -Wordsworth, Prefaces and Essays on Poetry, p.95. |