உயர்த்தி விரிவுடையதாக்கித் தூய்மைப்படுத்தித் தெளிவித்து மிகச் சிறந்த பாட்டுப் பாடுமாறு செய்தது என்பர்.1 ஆகவே சிறந்த கலைஞரின் உணர்ச்சிகள் அவ்வப்போதே கலைவடிவம் கொண்டு வெளிவருதலும் உண்டு; காலம் கழித்துத் தெளிவு பெற்று வெளி வருதலும் உண்டு எனலாம். பாட்டின் உணர்ச்சி எல்லா இலக்கியமும் புலவரின் அனுபவத்தை உணர்த்துவனவே எனினும், கதை நாடகம் முதலியவற்றைவிடப் பாட்டு ஒரு தனிச்சிறப்பு உடையது என்கிறார் அறிஞர் ஆபர்கிராம்பி. கதை முதலியன, ஒருவரின் அனுபவத்தைப் பற்றி உரைப்பன; பாட்டு, அந்த அனுபவத்தையே அளிப்பது; அந்த அனுபவத்தை அப்படியே நம் உள்ளத்தில் எழச்செய்வது என்கிறார் பாட்டில் அமையும் சொற்களின் ஒருவகை ஆற்றலால் அவ்வாறு செய்ய முடிகிறது என்பது அவருடைய கொள்கை.2 மற்ற நூல்கள், புளிச்சுவையைப்பற்றி விளக்கி நாவில் நீர் ஊறச் செய்வது போன்றன; பாட்டோ, புளிச்சுவையோ நாவில் உணர்த்தி நீர் ஊறச் செய்வது போன்றது. அதனால், புலவரின் அனுபவத்தை நன்கு பெறச் செய்வது பாட்டு என்பது தெளிவாகிறது. கவிஞரைப் பற்றியும் அவர் இயற்றும் பாட்டைப் பற்றியும் ஆபர்கிராம்பி கூறும் சில கருத்துக்கள் இங்கு உணரத்தக்கன. "பாட்டில் உள்ள சொற்கள் ஒரு பொருளை விளக்கவில்லை; 1. Seventeen years elapsed between the death of Arthur Hallam and the publication of Tennyson's exquisite elegy. Time does not destroy the sense of loss. But it lifts the soul to a place of broader outlook and calmer vision. -W.J.Dawson, The Makers of modern English. 2. Poetry differs from the rest of literature precisely in this; it does not merely tell us what a man experienced, it makes his very experience itself live again in our minds; by means of what I have colled the incantation of its words.
-L.Abercrombie. The idea of Great Poetry, p.29. |