அந்தப் பொருளையே நம் மனத்தில் படைத்து விடுகின்றன" 1 "பாட்டு என்பது, அனுபவத்தையே சொற்களாக மாற்றித்தரும் மொழி பெயர்ப்பாகும்."2 "மொழியின் வாயிலாகக் கவிஞரின் மனநிலையை நம் மனம் பெறுமாறு செய்யும் மந்திர வித்தை வேண்டும். பாட்டு நிலைபெற வேண்டுமானால், முதலாவதாக இந்த ஆற்றலை உடையதாக இருத்தல் வேண்டும்."3 அனுபவம் பலவகை புலவரின் அனுபவம் என்பது எளிதில் வரையறுக்கத் தக்கதன்று. ஏன் எனில், அந்த அனுபவத்தில், புலவரின் மனம் ஒரு பொருளால் (அல்லது, நிகழ்ச்சியால்) கொண்டதும் உண்டு; அந்தப் பொருளிடத்து (அல்லது நிகழ்ச்சியிடத்து) அவர் மனம் கொடுத்ததும் உண்டு. கொண்டதும் கொடுத்ததுமாகிய இரண்டும் பல்வேறு வகையில் அமையலாம்,4 புலவரின் மனம் பொருளுக்கு (அல்லது நிகழ்ச்சிக்குக்) கொடுத்த அனுபவத்தில், அவருடைய வாழ்க்கையனுபவமும் சூழ்நிலையும் அந்த நேரத்து உணர்ச்சியும் ஆகிய எல்லாம் கலந்திருக்கும். அவற்றைப் பகுத்துணரத் தொடங்கின், இவ்வாறே பல வகையில் விரிவுபெற்றுச் செல்லும். அனுபவம் இவ்வாறு, விரிவாக வேறுபட்டுச் செல்வதால்தான், ஒவ்வொரு புலவரும் ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியைப் பாடினும், பாட்டு வெவ்வேறு வகையாய் அமையக் காண்கிறோம். காதலனுடைய பிரிவாற்றாமையால் கண்ணுறங்காமல் இரவில் வருந்தும் துயர நிலையைப் புலவர் பலர் பாடியுள்ளனர். பொருள் ஒன்றேயாயினும் ஒவ்வொரு புலவரின் பாட்டும் ஒவ்வொரு வகையாக உள்ளது. எடுத்துக்காட்டாக,
1. woods have not described a fact, they have recreated in our minds the very fact itself. L.Abercrombie, the Idea of Great Poetry, p.20. 2. Poetry is the translation of experience into language-Ibid. p.23. 3. The magical inflection of our minds with the poet's mind by means of language, is the first thing poetry must be capable of in order to exist at all. -Ibid.p.24. 4. Experience can never be simple. It must always, at least unite what is given to a mind with what is given by the mind; and both of these may be complicated. L.Abercombie, Principles of Literary Criticism p.49. |