அருகா தாகிய வன்கண் நெஞ்சம் நள்ளென் கங்குல் புள்ஒலி கேட்டொறும் தேர்மணித் தெள்ளிசை கொல்என ஊர்மடி கங்குலும் துயில் மறந் ததுவே1
என்பது உலோச்சனார் பாட்டு. கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ் சலமே எம்இல் அயலது ஏழில் உம்பர் மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே2 எனப் பரணர் பாடியுள்ளார், கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல் சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய் அடல்கொள் படைஆழி அம்மானைக் கான்பான்நீ உடலம்நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே
என்று இப்பொருளையே கடவுட் காதலில் அமைத்துநம்மாழ்வார் பாடியுள்ளதும்,
மண்உறங்கும் விண்உறங்கும் மற்றுள வெலாம்உறங்கும் கண்உறங்கேன் எம்இறைவர் காதலால் பைங்கிளியே
என்று அவ்வாறே தாயுமானவர் பாடியுள்ளதும் காணலாம். பாடுவோரின் அனுபவத்திற்கு ஏற்றவாறு பாட்டுப் பலவகையாய் அமைதலை இவற்றில் காணலாம். பேகன் என்பவன் தம் மனைவி கண்ணகியைத் துறந்து வேறிடத்தில் வாழ்ந்தபோது, அவர் நிலை கண்டு இரங்கினர் புலவர் பெருமக்கள். அப்போது சிலர் பாட்டுப் பாடிப் பேகனை இரந்தனர். கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகியோர் பாடிய பாட்டுகள் புறநானூற்றில் உள்ளன. அவை ஒரே 1. நற்றிணை 287. 2. குறுந்தொகை, 120. |