பக்கம் எண் :

உணர்ச்சி 93

Untitled Document

காலத்தில்    ஒரு    நிகழ்ச்சி பற்றியே அக் காலத்துப் புலவர் சிலர்
ஒருவனையே    வேண்டிப்  பாடிய பாட்டுகள்; ஆயினும் வெவ்வேறு
வகையாய் அமைந்துள்ளன.

          "உன்னுடைய   வாயிலில்   சென்று    உன்னையும் உன்
மலையையும்       வாழ்த்தி   நான்   பாடியதைக்   கேட்டவுடனே
கண்ணீரைத்    தடுக்க   முடியாதவளாய்   விம்மி அழுதாள்" என்று
கபிலர் உணர்த்தினார்.

     வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
     நின்னும்நின் மலையும் பாட இன்னாது
     இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
     முலையகம் நனைய விம்மிக்
     குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே.1


       "உன் மலையைப்  பாடியவுடனே அழுதாள் ஒருத்தி. உனக்கு
உறவோ   என்று    யான் கேட்டபோது வருந்தி, யான் பேகனுடைய
உறவு   அல்லேன்   என்றும்,    அவன் எம்மைப்போல் ஒருத்தியை
விரும்பி   எங்கோ   வாழ்கின்றான்    என்றும்  கூறினாள். அவளை
வருந்துமாறு   விட்டு,    நீ அருளின்றி இருத்தல் கொடியது" என்றார்
பரணர்.

   அருளா யாகலோ கொடிதே...நின்
   காரெதிர் கானம் பாடினே மாக...
   இனைத லானாள் ஆக இளையோய்
   கிளையை மன் எங் கேள்வெய் யோற்கென
   யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
   முகைபுரை விரலின் கண்ணீர் துடையா
   யாம்அவன் கிளைஞரேம் அல்லேம் கேள்இனி
   எம்போல் ஒருத்தி நலம் நயந்து என்றும 
  வருஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்2

        "உன்னுடைய  பரிசிற்  செல்வம் வேண்டா, அவற்றைப் பெற
விரும்பி   வரவில்லை.   எமக்குப்    பரிசில் தர விரும்பினாயானால
உடனே   தேர்பூட்டிச்   சென்று   உன் துணைவியின் துயர் களைக"


    1. புறநானூறு, 143.
    2. ஷெ 144.