என்று அறிவுறுத்தினார் அரிசில்கிழார். அன்ன ஆகநின் அருங்கல வெறுங்கை அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக... பரிசில் நல்குவை யாயின்... அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை... தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே1 இவ்வாறே கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த போதும் உடனிருந்த புலவர் சிலர் வெவ்வேறு வகையில் தம் ஆற்றாமையைப் புலப்படுத்தியிருத்தல் காணலாம்.2 குழப்பம்: தெளிவு சிறந்தவை, பெற்று நுகரத் தக்கவை என்று கலைஞர்க்குத் தோன்றும் அனுபவங்கள் சில. அத்தகைய அனுபவங்களை அவர் அழியாமல் பதியவைத்துக் காக்கிறார். பதிந்து காக்கத் தக்க விழுமிய அனுபவங்கள் அவருக்குத்தான் ஏற்படுகின்றன என்கிறார் அறிஞர் ரிச்சர்ட்ஸ். மனத்தின் வளர்ச்சி இவ்வகையில் முழுமை பெற்று அமையும் வாழ்வு அவருடைய வாழ்வுதான். மற்றவர்களின் மனத்தில் குழம்பியும் கலங்கியும் முரண்பட்டும் கிடக்கும் உணர்ச்சிகள் அவருடைய மனத்தில் சீர்பெற இயைந்திருத்தலால், அவருக்கு அத்தகைய அனுபவங்கள் வாய்க்கின்றன. மற்ற மனங்களில் ஒழுங்கற்றுக் கிடப்பவற்றைக் கலைஞர் ஒழுங்குபெற அமைத்துத் தருகிறார். அதனாலேயே கலைஞரின் படைப்பு மதிப்புப் பெறுகிறது என்கிறார்.3 1. புறநானூறு, 146. 2. புறநானூறு, 212-223. 3. The artist is concerned with the record and perpetuation of the experience which seem to him most worth having. He is also the man who is most likely to have experience of value to record. He is the point at which the growth of the mind shows itself. His experiences, those at least which give value to his work represent conciniations of impulses which in most minds are still confused intertrammelled and clonflicting. His work is the ordering of what in most minds is disordered. -I.A. Richards, Principles of Literary Criticism p.61. |