புத்தகமும் உடன் கொண்டுவர வேண்டா என்று தம் தங்கையிடம் கூறுவாராம்.* உள்ளம் விரிவுறல் இலக்கியத்தின் கவர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், இவ்வாறு அது ஒருவரின் உள்ளத்தின் அனுபவத்தை நமக்குத் தருவதே ஆகும். மனிதன் உறவுகொண்டும் பகைத்தும் விரும்பியும் வெறுத்தும் மிகுதியாக உணர்வது மற்ற மக்களின் வாழ்க்கையையே ஆகும். ஒவ்வொருவரும் பலரோடு நெருங்கிப் பழக விரும்புகின்றனர்; சிலரை வெறுத்து ஒதுக்க விரும்புகின்றனர். ஆனால் அன்றாட வாழ்க்கையில் இவ்வாறு செய்வதற்கு உள்ள வாய்ப்புக் குறைவு. நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்பவர் மிக மிகச் சிலரே; அவரும் வேறு வேறு இடத்தவராய், வேறு சூழ்நிலையால் கட்டுப்பட்டவராய் நாம் நினைத்தபோது நமக்கு எட்டாதவராய் மாறுகின்றனர். நாம் பகைக்கும் சிலரையும் வெளிப்படையாய்ப் பகைக்கவும் பழிக்கவும் வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் தயங்குகிறோம். ஆனால் இலக்கிய உலகில் நாம் விரும்பும் சிலரோடு மிக நெருங்கிப் பழக முடிகிறது; விரும்பும் போதெல்லாம் அவர்கள் நமக்கு எட்டியவராக உள்ளனர். நாம் வெறுக்கவும் பழிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.1 ஆகையால், வாழ்க்கையில் நம் உள்ளத்திற்குக் கிடைக்கும் வாய்ப்பையும் உரிமையையும் விட, இலக்கியத்தில் நம் உள்ளத்திற்குக் கிடைக்கும் வாய்ப்பும் உரிமையும் மிகுதி. வாழ்க்கை நம உள்ளத்தை விரிவுபடுத்துவதை விட இலக்கியம் நம் உள்ளத்தை மிகமிக விரிவுபடுத்துவதாக உள்ளது. அறிவியல் துறையில் முன்னோர் தலைமுறை தலைமுறையாக வளர்த்துத் தந்த அறிவினை அடிப்படையாகக் * That nothing might interfere with their sheer awareness of the world, their drinking in of pure sensation. William counsels his sister to "bring no book," -E.G.Moll, The Appreciation of Poetry, p.21, 1. Art is the nearest thing to life; it is a mode of amplifying experience and extending our contact with our fellow-men beyond the bounds of our person al lot. -George Eliot, Hudson's An Introduction to the Study of Literature, p.18. |