பக்கம் எண் :

98இலக்கியத் திறன்

Untitled Document

கொண்டு  நாம்  மேன்மேலும்  முன்னேறுகிறோம். பிறர் அமைத்துத்  
தந்த   படிகளின்  மேல்  எளிதாக ஏறி நின்றுவர்களுக்கும் எட்டாத 
காட்சிகளைக்    காண்பது   போன்றது   அது.     அதுபோலவே,
கலைத்துறையிலும்   முன்னோர்    தந்த  அனுபவச்  செல்வங்களை
எளிதாகப்    பெற்று,    நாம்    மேலும்   புதிய  அனுபவங்களை 
நாடிச்செல்ல   முடிகிறது.1  காதல்,  வானத்தின் காட்சி, பறவைகளின்
இசை,   மலர்களின்    எழில்  முதலியவைகளைப் பற்றி முன்னோர் 
பெற்ற   அனுபவங்கள்   எல்லாவற்றையும் அவர்களின் பாட்டுகளின்
வாயிலாக   நாமும்  பெற முடிகிறது.  அவற்றிற்கு அப்பாலும் நாடிச்
செல்லமுடிகிறது.1   ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக மக்கள் பெற்று
வந்த உணர்ச்சிகளையும்    அனுபவங்களையும் நாம் பெற முடிகிறது
என்றால்,   அவற்றால்   வானம் பறவைகள் மலர்கள் முதலியவற்றை
மேலும் நன்றாக  உணர முடிகிறது என்றால், அது எவ்வளவு உயர்ந்த
செல்வமாக   உள்ளது!   அவ்வாறு   அனுபவங்களை  வழிவழியாக
உணர்த்தி   வாழ்விக்கும்  திறன்    கலையுணர்ச்சிக்கு   இருப்பதை
நினைந்து வியந்து போற்றல் வேண்டும்.



1. Sexual love, spring, a sunset, the song of the nightingale
and the ancient freshness of the rose are enriched by all
the complex history of emotions and experience shared in
common by a thousand generations.
          -Christopher Caudwell, illussion and Reality, p.20