| இனி, கோசர், அத்திகோசம் (யானையெறிகோசம்), வீரகோசம் (ஆளெறிகோசம்) என இருவகையராகவும் சொல்லப் பெறுவர். படைக்குச் சிறந்ததும் விலங்கிற் பெரியதும் யானையென்று கொண்டு, அதனையே போர்க்களத்தில் எறிந்துகொல்வோர் யானையெறிகோசத்தார். அஃது ஒரு விலங்கென்று இழித்து மறவரையே கொல்வோர் ஆளெறிகோசத்தார். |
| | "கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" | (குறள். 772) |
| | "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்" | (குறள். 774) |
| | "வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே" | (புறம். 301) |
| | "கறையடி யானைக் கல்ல துறைகழிப் பறியா வேலோன் ஊரே" | (புறம். 323) |
| | "ஆனை யாயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" | (இலக். வி. 839) |
| என்பன யானையெறி கோசத்தானைப் பற்றியன. |
| | "தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால்-யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்து வாழ்வேன்" | |
| (தொல். புறத்திணை. 5 உரை) |
| என்பது ஆளெறி கோசத்தானைப்பற்றியது. |
| இச்செய்யுட்களெல்லாம் தமிழ் மறவருட் சிறந்தாரைக் குறிப்பதல்லது. ஒரு வேற்றுநாட்டு வகுப்பாரை விதந்தோ கிளந்தோ குறியாமை காண்க. |
| பிற்காலச் சோழ பாண்டிய கொங்கு நாடுகளில், பழந்தமிழ்க் கோசரின் வழியினரான கைக்கோளப் படைமறவருள்ளும் தலைவருள்ளும் போர்க்களத்திற் பட்டவரின் குடும்பத்தார்க்கு, இரத்தக்காணிக்கை யென்றும் உதிரப்பட்டியென்றும் வழங்கும் மாநிலம் அரசரால் விடப்பட்டமை ஆங்காங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கும். |
| இங்ஙனம் கூற்றுடன்று மேல்வரினும் ஆற்றலுடன் பொரும் தறுகணாண்மைப் படைமறவரான கைக்கோளர், 16ஆம் நூற்றாண்டிற்குப் பின் (சேர சோழ பாண்டியரான) முத்தமிழரச மரபும் அற்றுப்போனதினா லும், போர்த்தொழிற் கிடமின்மையாலும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியமுறைக் குலப்பிரிவினாலும் 'தொல்வரவுந் தோலும்' கெட்டு மறம் என்னும் திறமும் அறவே இழந்துவிட்டனர். அவர் இன்று நெசவுத்தொழிலை மேற்கொண்டிருப்பினும், தமிழ்நாட்டின் தென்பாகத்தில் கைக்கோளர் என்றும் வடபாகத்தில் செங்குந்தர் என்றும் இன்றும் அவர்க்கு வழங்கிவரும் |