பக்கம் எண் :

கோசர் யார்?119

யென்றும், தென்னாட்டுத் தூய தமிழ்ப் பழங்குடி மக்களே யென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

     பண்டைக்காலத்தில், கொல்லேறு தழுவி மணந்த இடையரும் கோளரிக்கும் அஞ்சாக் குறவரும் ஆகிய இரு வகுப்பாரின் வழியினர் ஆரியத்தால் இன்று தம் முன்னோரின் தறுகணாண்மைத் தமிழ மறத்தை முற்றும் இழந்திருப்பதுபோன்றே, கூற்றுவனைச் சீறும் கோசரின் வழியினரான கைக்கோளர் செங்குந்தரும் இன்றுள்ளனர் என்க.

     பின் குறிப்புகள் :
     1. 'கோயன்புத்தூர்' என்பது 'கோவன்புத்தூர்' என்பதன் திரிபாகவும் இருக்கலாம். கல்வெட்டுகளில் உள்ளது 'கோவன்புத்தூர்' என்னும் வடிவமே. வகரம் யகரமாகத் திரிதல் இயல்பு.
எ-டு : கோவில் - கோயில்.
இனி, யகரம் வகரமாகத் திரிதலுமுண்டு.
எ-டு : சேயடி - சேவடி.
இது. கோயன் - கோவன் என்னும் திரிபிற்குச் சார்பாகலாம்.
  2. முத்தமிழ் நாட்டிலும் கோசர் இருந்தனர். அவருட் சிலர் துளுநாட்டைக் கைப்பற்றினர். அதனால் கோசர்நாடு துளு நாடெனப்பட்டது. இது, 'சேரர், கொங்கு' என்பது போன்றதே.
  3. அன்னி மிஞிலியின் தந்தை கண்ணை கோசர் ஒருசிலர் பிடுங்கிய கொடுமை பற்றிக் கோசர் எல்லாரையும் அயலார் என்று கொள்ளமுடியாது. வாய்க்காலில் விழுந்த மாங்கனியைத் தின்ற சிறுமியைக் கொன்ற நன்னனும் தமிழனே.
  4. செங்குந்தர் குடிப்பிறந்த ஒட்டக்கூத்தர் போன்ற கழகக்காலக் கோசருள்ளும் தமிழ்ப்புலவர் ஒருசிலர் இருந்தனர்.
  5. இற்றைக் கைக்கோளரும் செங்குந்தரும் கடுகளவேனும் அயன்மயுடையவரல்லர்; அங்ஙனமே கழகக்காலக் கோசரும்.
  6. மோரியப் படையெடுப்பிற்கு முன்பே கோசர் தமிழகத் திருந்தனர். ஆதலால், அவர் மோரியரொடு வந்தவரல்லர்.

- தென்மொழி, பொங்கல் மலர் 1960