ஆண்மயில் மீதமர்ந்து, அடியார்க்கு அளிக்கும் கண்கவர் கவின் காட்சியும், காவடி நோன்பின் மாட்சியும், முருகநேயர்க்கு முழுமனக் கவர்ச்சி யென்பதைச் சொல்லவேண்டுவதில்லை. | 6. முருகன் முதன்மை:- | இனி, முருகனே சிவனுக்கு ஓங்காரப் பொருளை உணர்த்தினான் என்று சிவனியரும் ஒப்புக் கொள்ளுஞ் செய்தி, 'மகவே மாந்தனின் தந்தை ("The child is father to the man") என்னும் பழமொழிக் கருத்தையுணர்த்தி முருகனின் முதன்மையை நாட்டுகின்றது. | காந்தம் (ஸ்காந்தம்) உள்ளிட்ட பதினென் புராணங்களைப் புனைந்த வியாசர் காலம் கி.மு. 1000 அல்லது 1200. தமிழகத்தில் முருக வணக்கந் தோன்றியது கி.மு. 1,00,000. | தமிழ்நிலப் பறவைகளுள் வெற்றி காணும்வரை வீறு மறப் போரிடுவது குறிஞ்சி நிலக் கோழிச் சேவல் ஒன்றே. அதனால், குறிஞ்சிநில மறவர் தம் மறத்தெய்வ முருகனுக்குக் கோழிச் சேவலைக் கொடிச் சின்னமாக்கினர். இதை யுணராது காலஞ்சென்ற கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், முருகன் என்னும் பெயர் சேவலைக் குறிக்கும் 'முர்கா' என்னும் பாரசீகச் சொல்லி னின்று திரிந்ததாகக் கருதியது, எத்துணை இழிதகவானது என்பதைப் பகுத்தறிவுள்ள நடுநிலையறிஞர் கண்டுகொள்க. | - நன்னீராட்டு நறுமலர், குன்றக்குடி, 1973 | | |
|
|