| "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" | (குறள். 969) |
என்றார் திருவள்ளுவர். |
காகம் ஓரிடத்து உணவைக் கண்டவுடன் தன் இனத்தை அழைத்து உடனுண்கின்றது. |
| "காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள" | (குறள். 572) |
என்றார் திருவள்ளுவர். |
| "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று." | (குறள். 108) |
| "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்" | (குறள். 109) |
என்னும் இரு குறள்கட்கும் இலக்காயது நாயினம் ஒன்றே. |
| "யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்." | (நாலடியார், 213) |
என்னும் உண்மை என்றும் எங்கும் காணலாம். |
| "கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி"... ... |
(190) |
என்னும் புறப்பகுதி, புலி பசிப்பினும் இடப்பக்கம் விழுந்த விலங்கை உண்ணாக் கோட்பாடுடையது எனத் தெரிவிக்கும். |
| "கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல்... ... ..." | (99) |
என்னும் குறுந்தொகைச் செய்யுள், ஒரு மந்தியின் தலையாய காதலையும், அதன் குட்டியைப் பேணும் பொறுப்புணர்ச்சியையும், அக் குட்டியை ஏற்றுக் கொண்ட பிற குரங்குகளின் கூட்டுற வன்பையும், ஒருங்கே உணர்த்தும். |
ஒழுங்கு, ஒற்றுமை, கூட்டுறவு என்பனவும் பண்பாட்டுள் அடங்கு மேனும், தொகுதிப் பண்பாதலின் முன்பு வேறாகக் கூறப்பெற்றன. |