பக்கம் எண் :

130தமிழியற் கட்டுரைகள்

10 மதிநுட்பம்
     விலங்குகட்குள் நரி வலக்காரத்தில் (தந்திரத்தில்) சிறந்ததென்பது மரபுக் கூற்று. வலக்காரம் மதிநுட்பக் கூறுகளுள் ஒன்று.
     குறவை மீன், எலி, மூட்டைப்பூச்சி முதலிய உயிரினங்கள் மாந்தர் கைக்குத் தப்புவதற்குக் கையாளும் விரகுகள் (உபாயங்கள்), அவற்றின் மதிநுட்பத்தைச் சிறப்பக் காட்டும்.
11 புலநுணுக்கம்
     பாம்பு, சிறப்பாக நல்ல பாம்பு, கூர்ங்கட் புலனாலும் மோப்பத்தி னாலும் எல்லா ஆட்களையும் எளிதாய் அடையாளங் கண்டுகொள் கின்றது, அதனால், ஒருவனால் அடியுண்டு தப்பிய நாகம் பின்னர் அவனைக் கண்டு கொன்றுவிடும் என்பது உலக நம்பிக்கை.
     மலையாள நாட்டு இல்லங்களில் படைப்பினாலும் பூசையினாலும் பேணப்பெறும் நாகங்கள். தம்மைப் பேணுவோர் இருண்ட இரவில் தம் பக்கமாகச் செல்லினும், அவரையும் அவரொடு கூட வரும் பிறரையும் கடிப்பதில்லை என்று, செய்தித்தாட்கள் அறிவிக்கின்றன, 
     பாம்பு நுண்ணிய செவிப் புலனும் உடையது, 'அரவம் அரவம் அறியும்' என்பது பழமொழி. இடியோசை நாகத்திற்கு இன்னாதது.
     கழுகினம் நெடுந்தொலைவில் கிடக்கும் விடக்கூனையும் முகர்ந் தறியும் ஆற்றலுடையது.
     வழக்கற்றுப்போன அசுணம் என்னும் விலங்கு, இன்னிசைக்குச் சிறந்த எஃகு செவியுடைய தென்றும், அதனை வேட்டையாடுபவர் அதனருகே மறைவிலிருந்து இனிய யாழை இயக்கி அது இன்புற்று மயங்கி நிற்கும்போது திடுமெனக் கடும்பறை யறைய, அது உடனே இறந்து விடுமென்றும், இலக்கியம் கூறும்.
     யானை நீடிய நினைவாற்றலுடையது.
12. வினைத்திறம்
  "வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோருமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."
என்னும் ஒளவையார் பாடலொன்றே சில அஃறிணை யுயிரிகளின் வினைத்திறத்தைக் காட்டப் போதுமானது.
13. பயன்பாடு
     உணவு, மருந்து, கருவி, வினைத்துணை, காட்சியின்பம், காவல், ஆடையணி, நறுவிரை, உறையுள், தட்டுமுட்டு முதலிய பல்வேறு வகையில