மூவேந்தரின் அடையாளப் பூக்களும், போர்ப்பூக்களும், கடிமரங்களும் இத்தகையன. வேப்பிலையும் வெண்சிறு கடுகும் பேய்க்காப்பெனப்படும். |
நரிக்கொம்பு மிகுந்த பொங்கை (அதிர்ஷ்டத்தை) உண்டுபண்ணும் என்பது பொது மக்கள் நம்பிக்கை. |
20. தெய்வம்: |
சில விலங்கு பறவைகளின் உருவங்கள் தொன்றுதொட்டுத் தெய்வங் களாக வணங்கப்பட்டு வருகின்றன. கலுழனும் (கருடன்) நல்லபாம்பும் இன்றும் உயிருள்ள நிலையில் தொழப்பெறுகின்றன. |
நன்மைப் பேறும் தீங்கச்சமும் தெய்வத் தொடர்பும் இதற்குக் காரணமாம். |
இறுதியிற் கூறிய இரண்டும் மூடப்பழக்கமே யாயினும் பெரும்பாலும் மாந்தர்க் கில்லாத சிறப்பைக் காட்டுகின்றன. |
சிலர் மாந்தர்க்குப் பேசுந்திறன் பிறவுயிரிகட் கில்லாத பெருஞ்சிறப் பென்பர். சில கிளிகளும் பூவைகளும் கற்றுக்கொடுத்த அளவிலாவது பேசுந் திறனுடையன. |
இதுகாறும் கூறியவற்றால், மாந்தன் எக்காரணத்தையிட்டும் செருக் கடையாது, முடிசார்ந்த மன்னரும் முடிவி லொரு பிடி சாம்பராகும் உண்மையை நினைந்து, இறைவன் திருவடியடைந்து உய்வானாக. |
- தென்மொழி 1959 |