| திருவள்ளுவர் காலம் |
| முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற் கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண் டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற் கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும். |
| திருவள்ளுவர் காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தின தென்பதற்குச் சான்றுகள்: |
| 1. தொல்காப்பிய நூற்பாக்களையும் மாந்தர்ப் பகுப்பையும் திருவள்ளுவர் தழுவியிருத்தல். திருவள்ளுவர், |
| "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" | |
| (1434) |
| என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, |
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்" | |
| (28) |
| என்னுங் குறளிலும், |
"எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான" | |
| (981) |
| என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, |
"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்" | |
| (1137) |
| என்னுங் குறளிலுந் தழுவியிருத்தலும். |