| "மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே." | (அகம். 211) |
இங்ஙனமே, |
| "நெருநற்றுச் சென்றார்எங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து" | (1278) |
என்று குறளிலும் உலகவழக்கிற்குரிய உயர்வுப் பன்மை வந்திருத்தல் காண்க. |
4. | "எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே", | (1008) |
| "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்", | (1336) |
| "வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே" | (1582) |
என்று தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்ட முழுநிறைவான மூவேந்தர் தலைமை, |
| "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு" | (735) |
என்று குறைவுறக் குறிக்கப்பட்டமை, |
5. | "தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில்" | (256) |
என்னுங் குறள் புத்தமதக் கொள்கையைக் கண்டிப்பதாயிருத்தல். |
புத்தர் காலம் கி. மு. 6ஆம் நூற்றாண்டு. புத்த மதம் உலகிற் பரப்பப் பட்ட காலம் கி. மு. 273-236. அசோகன் மகன் (அல்லது உடன்பிறந்தான்) நால்வருடன் இலங்கை சென்று அங்குப் புத்த மதத்தைப் பரப்பிய காலம் கி. மு. 247-07. அதன் பின்னரே அம் மதம் தமிழகத்திற் புகுந்திருத்தல் வேண்டும். |
6. 'மலர்மிசை யேகினான்' ('பூமேல் நடந்தான்'), 'பொறிவாயி லைந் தவித்தான்' முதலிய அருகன் பெயர்கள், கடவுட் பெயர்களாகத் திருக்குறள் முதலதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளமை, |
புத்த மதத்தின் பின்னரே ஆருகதம் தமிழகம் வந்ததாகத் தெரிகின்றது. |
திருவள்ளுவர் காலம் கடைக்கழக முடிவிற்கு முந்தியதென்பதற்குச் சான்றுகள்: |