1. | "பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்" | (319) |
என்னுங் குறள், |
| "முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்" | (21:3-4) |
என்று கி. பி. 2ஆம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாக இளங்கோவடிகளால் அமைக்கப்பட்டிருத்தல். |
2. | "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை" | (55) |
என்னுந் திருக்குறள், |
| "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" | |
என்று பெரும்பாலும் சொன்மாறாதும் திருவள்ளுவரின் சிறப்புப்பெயர் குறிக்கப்பெற்றும், சிலப்பதிகாரக் காலத்ததான மணிமேகலையில் (22:59-62) சதுக்கப்பூதத்தின் கூற்றாகச் சீத்தலைச் சாத்தனாரால் எடுத்தாளப் பெற்றிருத்தல். |
3. | "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" | (110) |
என்னுந் திருக்குறட் கருத்து ஆலத்தூர்கிழார் பாடிய, |
| "ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ" | (புறம். 34) |
என்னும் புறப்பாட்டிலும், |
| "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய்" | (69) |
என்னுங் குறட்கருத்து, காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய |
| "செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே" | (புறம். 278) |
என்னும் புறப்பாட்டிலும், அமைந்திருத்தல். |