பக்கம் எண் :

30தமிழியற் கட்டுரைகள்

     பிறைக் கோடு என்பது பிறைபோல் வளைந்துள்ள கோடு என்று பொருள்படும் இரு சொற்றொடர்.
     இவற்றிற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆயினும், ஒலியும் பொருளும் ஒத்துள்ளன. இங்ஙனம் அமைதல் மிக அருமையாதலின், ஒரு சில சொற்கள் தாம் இம் முறையில் அமைக்கப்பெறும்.
     முதலெழுத்துச் சொல்லாவது, ஒரு பொருளைப் பற்றிய வண்ணனைச் சொற்கள் முதலெழுத்துக்களைமட்டும் சேர்த்து ஒரு பெயர் அல்லது குறியீடு அமைத்தல்.
     எ-கா : Radar.
     இது, radio detection and ranging என்னும் நாற்சொல் முதலெழுத்துக் கோப்பு. இம்முறை பற்றியே, கதிரியத் துப்பறிவும் வீச்சீடும் என்னும் முற்சொற்களின் முதலெழுத்துக்களைச் சேர்த்துக் கதுவீ என்றோ, (வானூர்தி மரக்கலம் கடற்கரை முதலியவற்றின்) வாக்கும் (direction) வீச்சும் (range) காணி என்னும் பொருளில் வாவீணி என்றோ, அமைத்துக்கொள்ளலாம்.
     ஆங்கிலக் குறியீடுகளெல்லாம் பொருளளவில் பெருவளங் கொண்டன வேனும், சொல்லளவில் மிக எளிய முறையிலேயே அமைந் துள்ளன. மேற்கூறிய ஐம் முறைகளையும் கையாளின் எல்லா அறிவியற் குறியீடுகளையும் தமிழில் எளிதாய் மொழிபெயர்த்துவிடலாம். தாய் மொழிப் பற்றொன்றே தேவை.

- தென்மொழி