பக்கம் எண் :

31

நிகழ்கால வினை வடிவம்

தொல்காப்பியர்,
"வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்"

(தொல். வினை. 1)

"காலந் தாமே மூன்றென மொழிப"

(தொல். வினை. 2)

"இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே"

(தொல். வினை. 3)

     என்னும் நூற்பாக்கள் வாயிலாக வினைச்சொற் காலம் மூன்றெனக் கூறியிருப்பினும் நிகழ்காலவினை முற்று வடிவிலோ எச்ச வடிவிலோ இடநிலைகாட்டி யாண்டுங் கூறவேயில்லை. அவர்,
"செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி"

(தொல். வினை. 31)

     என வினையெச்ச வாய்பாடுகளை, ஒருவாறு நிகழ்காலமும் அடங்க முக்காலத்திற்கும் தொகுத்துக் கூறினாரேனும், பெயரெச்ச வாய்பாடுகளைக் கூறுமிடத்து.

"செய்யும் செய்த என்னுஞ் சொல்லே"

(தொல். வினை. 37)

     என, நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொதுப்படச் 'செய்யும்', என்னும் ஒரே வாய்பாட்டை ஆண்டாரேயன்றி,

"செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின்"

(நன். 340)

     என நன்னூலாரைப்போல நிகழ்காலத்திற்கெனத் தனிப்பட ஒன்றையுங் கூறிற்றிலர்.
     சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியன்மாரும், முக்கால வினை முற்றிற்கும் "உண்டான், உண்ணாநின்றான், உண்பான்" என எடுத்துக் காட்டினரேனும் நிகழ்கால வினையைத் தொல்காப்பியர் விதந்து குறிப்பிடும் நூற்பாக்களின்கீழ் செய்யாநின்றான் என்னும் வாய்பாட்டு வினைமுற்றைக் காட்டாவிடத்தெல்லாம் 'செய்யும்' என்னும் வாய்பாட்டு வினையையே எடுத்தாண்டுள்ளனர். 'ஆநின்று' என்னும் இடைநிலை 'கின்று' என்பதுபோல்