பக்கம் எண் :

34தமிழியற் கட்டுரைகள்

     எ-கா : எழுத்ததிகாரம்: (1) தொகைமரபு
  "இயல்பா குநவும் உறழா குநவும்"

(9)

  "இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும்."

(16)

  "வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்"

(17)

     (2) குற்றியலுகரப் புணரியல்.

  "கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கில் மருவொடு திரிநவும்"

(78)

     சொல்லதிகாரம் : (1) இடையியல்.
  "புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்"

(2)

     (2) எச்சவியல்
  "பெயர் நிலைக் கிளவியின் ஆஅ குநவும்
திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்
தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும்
மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்"

(53)

     பொருளதிகாரம் : பொருளியல்
  "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்"

(37)

     இஃதேல், தொல்காப்பியர் தம் நூலுள் தாம் கூறியதையே ஏன் ஆராய்ந்திலர் எனின்.
  "தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று"

(100)

என அவர் செய்யுளியலில் தாம் கூறியதையும் நோக்காதே.
  "ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகர மாகும்"

(தொல். 445)

எனக் குற்றியலுகரப் புணரியலிற் கூறியதுபோன்றே எனக் கூறி விடுக்க (தொண்டு 9. தொண்டு + பத்து = தொண்பது (90). தொன்பது - ஒன்பது. தொண்டு + நூறு = தொண்ணூறு (900). தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் (9000).