பக்கம் எண் :

நிகழ்கால வினை வடிவம்35

     "அற்றேல் கின்று என்பது றன்னகரங் கொண்டிருக்கவும் அதன் திரிவில் தந்நகரம் வந்த தெங்ஙனமெனின் தந்து - தந்நு, வந்து - வந்நு எனத் தந்நகரம் பயின்றுவரும் சேரநாட்டு வழக்குப் பின்பற்றி யென்க. செய்நன் என்னும் வடிவு தோன்றியதே மூக்கொலி மிக்குப் பயிலும் சேரநாட்டில்தான்.
     இதுகாறும் கூறிவற்றால், 'கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை திரிந்தோ திரியாதோ தொல்காப்பியர் காலத்திலும் வழங்கிற்றென்றும், அவர் நிகழ்காலத்திற்குத் தனி வினை வடிவு கூறாதது குன்றக் கூறலாமென்றும் அறிந்துகொள்க.

- தமிழ்ப்பொழில் ஆனி 1956