பக்கம் எண் :

42தமிழியற் கட்டுரைகள்

     கிழமை வேற்றுமைப் பெயர்களெல்லாம் பெயரெச்சப் பொருள் படுதலின், 'காட்டு', 'மரத்து' என்பனபோன்ற சொற்கள் பெயரெச்சமாய் ஆளப்பெறுவது ஒரு வியப்பன்று. ஆங்கிலத்திலும் possessive adjective அழைக்கும் வழக்கமுண்மை காண்க.

     (4) 3ஆம் வேற்றுமையும் 5ஆம் வேற்றுமையும் பல பொருள் கொண்டுள்ளனபோலத் தோன்றினும், அவை உண்மையில் ஒரு பொருள் கொண்டவையே.

     3ஆம் வேற்றுமைக்குரிய கருவி, வினைமுதல், உடனிகழ்ச்சி ஆகிய மூன்றனுள் முதலிரண்டும் ஈற்றதைத் தழுவியவையே. ஒருவன் ஒரு கருவியால் ஒரு கருமம் அல்லது பொருள் செய்யும்போது, அக் கருவி அவனொடுகூட இருத்தல் காண்க. வினைமுதல் முதல் வேற்றுமை (எழுவாய்) வடிவிற் கூறப்படாது 3ஆம் வேற்றுமை வடிவிற் கூறப்படின் கருவி நிலை யடைந்துவிடுவதால் வினைமுதலும் கருவியோ டொக்கும். கருவியும் உடனிகழ்ச்சியும் ஒருபாற்படுவதினாலேயே, இருசார் 3ஆம் வேற்றுமையுருபுகளும் இரு பொருளிலும் மயங்குகின்றன என அறிக.
  எ-கா: (ஆல்) ஆன் - உளியாற் செதுக்கினான் (கருவி)
(ஆல்) ஆன் - ஊரானொரு தேவகுலம் (உடனிகழ்ச்சி)
ஒடு (ஒடு, உடன்) - நாயொடு நம்பி வந்தான்
ஒடு (ஓடு, உடன்) - மண்ணொடு குயின்ற குடம் (கருவி)
  ஆங்கிலத்திலும்,
I see with my eyes
I write with my pen } instrument
I came with my son - conjunction.
     எனச் ஒடுச் சொல் இருபொருளிலும் வருதல் காண்க.
     இனி 5ஆம் வேற்றுமைப் பொருள்களாகிய நீங்கல் ஒப்பு எல்லை ஏது என்னும் நான்கனுள், இறுதி மூன்றும் முதலதன் நுண் வேறுபாடுகளே.
     ஒப்பு என்பது உவமப்பொருவு உறழ்பொருவு என இருதிறப்படினும் "காக்கையிற் கரிது களம்பழம்" என்பது 5ஆம் வேற்றுமையாய்ப் பழம் காக்கையைவிடக் கரிது என்றே பொருள்படும். காக்கையைப்போலக் கரிது என்னும் பொருள் வேற்றுமைக் குரியதாம். "கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி" என்பன போன்ற தொடர்களெல்லாம் உறழ் பொருவுற்று 5ஆம் வேற்றுமைக்கே யுரியனவாம். ஒரு வகையில் ஒப்புமை கொண்ட இருபொருள்களுள், ஒன்று உறழ்ந்து அல்லது விஞ்சி நிற்பின் ஒப்புமையினின்று நீங்குதல் காண்க.
     இனி 'தில்லையின் வடக்கு சென்னை' என்பதில் இடவகையான நீங்கற் பொருளும், "வாணிகத்தின் ஆயினான் வடிவேல்" என்பதில் நிலை