கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் - தமிழ் வேற்றுமையமைப்பு | 43 |
வகையால் நீங்கற் பொருளும் இருத்தல் காண்க. இங்ஙனம் 5ஆம் வேற்றுமைப் பொருள்களெல்லாம் நீக்கப் பொருளேயாதல் நோக்கித்தெளிக. | ஏனை வேற்றுமைகளெல்லாம் ஒவ்வொரு பொருளே கொண்டன வென்பது எல்லார்க்கும் தெளிவாம். | (5) "இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களுள் முதலதான தொல்காப்பியம்," | அவைதாம், | பெயர் ஐ ஒடு கு | | இன் அது கண்விளி என்னும் ஈற்ற" | (548) | என வேற்றுமைகளைப் பொருள்பற்றி வரிசைப்படுத்தி உருபுபற்றிப் பெயரிட்டழைக்கின்றது. | இனி | | "அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே" | (தொல்,549) | | "இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி | (தொல், 555) | | "முன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி | (தொல், 557) | | "நான்கா குவதே குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி | (தொல், 559) | | "ஐந்தா குவதே இன்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி | (தொல், 561) | | "ஆறா குவதே அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி | (தொல், 563) | | "ஏழா குவதே கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி | (தொல், 565) | | "விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய என்ப" | (தொல், 603) | எனப் பிற்பட்ட நூற்பாக்களிலும் முற்கூறிய முறையையே முதன்மையாகக் கையாளுதல் காண்க. நன்னூலாரும் தொல்காப்பியரை அடியொற்றியே வேற்றுமைகளைப் பெயரிட்டழைக்கின்றார். | எழுவாய் எனினும் பெயர் எனினும் ஒக்கும். | இங்ஙனம் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருபுபற்றி வேற்றுமைகளை வரிசைப்படுத்திக் கூறும்போதே, எண் முறை பற்றிப் பெயரிட்டாளுதற்கும் தோற்றுவாய் செய்துள்ளது தொல்காப்பியம் அல்லது | | |
|
|