அஃது, இஃது, உஃது, எஃது | இவை, அல்+து, இல்+து, உல்+து, எல்+து என்னும் புணர்ச்சியாகத் தோன்றுகின்றன. அன்று இன்று என்று என்னும் காலச் சுட்டுவினாச் சொற்களின் அடிகளும், அல் இல் எல் என்பனவே. இவற்றை, அல்லி இல்லி எல்லி என்னும் கன்னட இடச்சுட்டு வினாச்சொற்களொடும், அன்று (அல்+து) இன்று (இல்+து) நன்று (நல்+து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுச் சொற்களொடும், ஒப்புநோக்குக. | அல் + து = அஃது - அத்து - அது. இங்ஙனமே ஏனையவும். | "அத்தொடு நின்றது அலைச்சல், கொட்டொடு நின்றது குலைச்சல்," "எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்" என்பன பழமொழிகள். | பஃது | பல் + து = பஃது - பத்து - பது. | பல் - பன் = பத்து. ஒ.நோ: ஆல் - ஆன், வெல் - வென். | பன் + இரண்டு = பன்னிரண்டு. | பன் - பான் = பத்து. இருபான் முப்பான் முதலிய எண்ணுப் பெயர்களை நோக்குக. | முதன் முதலாகத் தோன்றிய ஒன்று முதற் பத்து வரைப்பட்ட எண்ணுப்பெயர்களுள், ஒன்பதிற்கு மேற்பட்ட எண்ணைப் பல என்னும் கருத்துப்பற்றிப் பல் என்னும் அடியினின்று அமைத்ததாகத் தெரிகின்றது. | எஃகு | இள் ( - இள - இளகு) - எள் - எள்கு - எஃகு = உருக்கு, அதாவது இளகின தாது (உலோகம்). எஃகு - எஃகம் = உருக்கினாற் செய்த வேல். | பஃறி | பல் + தி = பஃறி (பன்றி) = பன்றி வடிவான ஒருவகைப் படகு. இதிற் சரக்கேற்றிச் செல்வதை இன்றும் கூவம் முதலிய ஆறுகளிற் பார்க்கலாம். | வெஃகு | பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல். பிணா-பிணை. | பிள் - பெள் - பெண் - பேண் - பேடு - பேடை | பெள் - பெட்டை - பெடை. | பெள் - பெட்பு = விருப்பம். | பெள் - வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வேண்டல். | வெள் - வேள் - வேண் - வேண்டு. | வெள் - வெள்கு - வெஃகு. | வெஃகுதல் = பிறன் பொருளை விரும்புதல், | | |
|
|