மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் | 57 |
உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன், என இத் தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம், ஓடம் பாடம் இவைபோல்வன மயங்காதன. வரையறை னகரத்தின் மேற்செல்லும் மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம் என்பது நச்சினார்க்கினிய ருரை. | இவ் எளிய உண்மையை அறியாது, அறிஞர் சிலர், நிலம் நிலன். முதலியவற்றை யான் யாம் முதலியவற்றோ டொப்பக் கொண்டு, மயங்கி, நிலன் ஒருமை யென்றும் நிலம் பன்மையென்றும் கருதுகின்றனர். இது, அஃறிணை யீற்று ளகர வொற்றையும் பெண்பாலீறாகிய ளகர வொற்றொடு மயக்கி, மதில் செதில் என்பவற்றின் போலியாகிய மதிள் செதிள் என்பனவும் பெண்பாலே யெனக் கொள்வ தொத்ததே. | மேலும், ஒருமை யீறு பன்மை யீற்றிற்கு இடவகையிலேனும் முந்தியதாதலின், யான் நான் என்னும் னகர வீற்றுச் சொற்கள் யாம், நாம் என்னும் மகர வீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், இதற்கு மாறாகப் போலிச் சொற்களுள், மரம் குளம் முதலிய மகர வீற்றுச் சொற்கள் மரன் குளன் முதலிய னகர வீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், காண்க. | இனி, இதழ்கள் பொருந்துவதாலேயே பிறக்கும் மகரம் முன்னண்ணத்தை நுனிநா அழுந்தப் பொருந்தும் முயற்சியாகப் பிறக்கும் னகரத்தினும் எளிதாயிருத்தலால், அதுவே முந்தித் தோன்றிய மெல்லின மெய்யாயிருத்தல் வேண்டுமென்றும், கண்டுகொள்க. | இனி, மடம், சினம் முதலிய பண்புகள் பொதுவாக எண்ணப்படு பொருள்களாகாமையும் அறிக. | ஒரு பெருமொழி பேசப்படும் இடம் மிகப் பரந்ததாயிருக்கு மாதலின், இடந்தொறும் சில எழுத்தொலிகள் வேறுபடுவது இயல்பே. அதோடு இன்னோசைப் பொருட்டும் புலவர் சிலர் தம் செய்யுட்களில் வரும் ஒரு சில சொற்களின் ஓரிடத்து ஒரெழுத்தை மற்றோரெழுத்தாக மாற்றிக் கொள்வதுமுண்டு. இது தொன்றுதொட்டுப் போலியென வழங்கிவருவது மரபாயிருக்க, அதற்கு எண்ணுப் பொருளை ஏற்றிக் கூறுவது போலியென விடுக்க. | - தென்றல் 1958 | | |
|
|