சொல்லே என்பதை, யான் சென்ற ஆண்டுத் தமிழ்ப் பொழிலில் வரைந்துள்ள தமிழ் முகம் என்னும் கட்டுரையைக் கண்டு தெளிக. | இற்றைத் தமிழருட் பெரும்பாலார் பகுத்தறி விழந்திருப்பது நோக்கி வடவரும் (அவர் அடிவருடியரும் அடியார்க்கடியாருமான) வையாபுரிகளும் தூய தென் சொற்களை வடசொல்லெனத் துணிந்து மருட்டுவது பற்றி, அவை அன்னவென்று மயங்கற்க. | மேற்காட்டியவாறு, முகவுரையைக் குறிக்கப் பல தூய தென் சொற்க ளிருப்பவும், இடைக்காலப் புலவர், சிறப்பாக யாழ்ப்பாணத்தார், உபக்கிர மணிகை, உபோத்காதம் என்னும் வடசொற்களை வேண்டாது வழங்கிச் சிறுமையிற் பெருமை கொண்டனர். இத்தகைய வடசொல்லாட்சி தமிழரின் மடமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்ந்ததேயன்றி, தலைமைசால் தமிழ்ப்புலவர் தாமாக விரும்பித் தழுவி யன்று. ஆதலால், தமிழின் தூய்மையைக் குலைத்ததுமன்றி அதன் தொண்டையையும் நெரித்துக் கொல்லப்பார்க்கும் ஐந்தாம்படைச் சொற்களையெல்லாம், அறவே அகற்றிவிடுவது தமிழன் முதற் கடமையாம். | தமிழன் விடுதலை, தமிழின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டது. தமிழுயரத் தமிழன் உயர்வான். | - தென்றல் | | |
|
|