| "கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கட் டங்கியான் தாழ்வு" | (117) |
பீழி = பீடி. பீழித்தல் = துன்புறுத்தல். பிள் - பீள் - பீழ் - பீழி. |
பிடுங்கல் என்னும் வழக்கை நோக்குக. |
| "அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது" | (843) |
| "நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது" | (1217) |
முயற்று = முயற்சி. |
| "முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" | (616) |
வரன் = பரம் (மேலுலகம்). |
புரம்-பரம்-வரம்-வரன். புரம்=மேலிடம். |
கோபுரம்=அரசனிருக்கும் உயர்ந்த இடம். |
| "புரை யுயர் பாகும்" | (தொல். 785) |
| "உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து" | (24) |
4. சிறப்புப் பொருளாட்சி |
இடம் = செல்வம். இடம்-இடன். |
| "இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு" | (1064) |
| "இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்" | (218) |
என்பு = உடம்பு. இது சினையாகுபெயர். |
| "அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு" | (72) |
| "அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு" | (73) |
குடங்கர் = குடில். |
| "உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று" | (890) |
குதித்தல் = தாண்டுதல், கடத்தல், மேற் கொள்ளுதல், வெல்லுதல். |
| "கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" | (269) |