சிமிழ்த்தல் = வலையுள் அகப்படுத்துதல். |
| "தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று" | (274) |
மாடு = செல்வம். |
இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை = பொன், பொற்கட்டி. மாழை-மாடை-மாஷ (வட சொல்). |
பண்டைக் காலத்தில் உலகமெங்கும் கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் விலங்குப் பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். |
ஒ.நோ : |
இலத்தீன் (L): pecu (=cattle)-pecunia (=money)- |
ஆங்கிலம் (E): pecuniary=consisting of money. |
L. caput (=head)-capitalis-E. capital-cattle-chattel=movalle possessions. |
| "கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை." | (400) |
மையாத்தல் = மயங்குதல். |
| "மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று" | (1112) |
நாகரிகம் = பண்பாடு. |
இச் சொல்லை இப் பொருளிலேயே திருவள்ளுவர் ஆண்டிருக் கின்றார். கண்ணோட்டம் ஒரு பண்பாட்டியல் யென்பதை யறிக. நாகரிகம் என்னுஞ் சொற்குக் கண்ணோட்டம் என்பது நேர்ப்பொருளன்று. |
- திருவள்ளுவர் நினைவு மலர் |