| "திருமக னருளப் பெற்றுத் திருநிலத் துறையு மாந்தர் ஒருவனுக் கொருத்தி போல உளமகிழ்ந் தொளியின் வைகிப் பருவரு பகையு நோயும் பசியுங்கெட் டொழிய" | (2377) |
என்னுஞ் செய்யுள் மிக இன்புறத்தக்கது. |
என்னும் அடிகளில் வைத்தும் உலகிற்குணர்த்துகின்றார். ஒருவன், கற்புக்காலத்தில் சிற்சில காரணம்பற்றித் தன் மனைவியை அல்லது மனைவியரைவிட்டுப் பிரிய நேரினும், அவரைக் கைவிடக் கூடாதென் பதும், அவரொடு மீண்டும் கூடி வாழ வேண்டுமென்பதும் சீவகன் வாழ்க்கையால் உணர்த்தப் பெறுகின்றன. |
8. குறிக்கோள்: |
மருந்தைத் தனியாக வுண்டலும் உண்டியிற் கலந்துண்பித்தலும் பயனளவில் ஒன்றேயாதல் போல, அறவிதிகளை அறநூல் வாயிலாக அறி வித்தலும் வனப்புநூல் வாயிலாக அறிவித்தலும் குறிக்கோளளவில் ஒன்றே. சிறந்த அறவனப்பு நூல்கள் குறிக்கொள்வதெல்லாம் அறம் பொருளின்ப வீட்டுப் பேறே. சிந்தாமணி ஒரு சிறந்த வனப்பு நூலாதலின், அதன்கண்ணும் நான் மாண் பொருள்களே நன்முறையில் வலியுறுத்தப் பெற்றுள. |
| "குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்." | (2620) |
| "நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல் ஆண்மக்கள் கடன்." | (1119) |
| "உறுவர்ப் பேணல் உவர்ப்பின்மை உலையா வின்பந் தலைநிற்றல் அறிவர் சிறப்பிற் கெதிர்விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம்பகர்தல் சிறியா ரினத்துச் சேர்வின்மை சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ னறத்து வார்க்கெல்லாம் இனிய ராதல் இதுதெளிவே." | (2816) |
இவை அறம். |
துன்பத்திற் கலங்காமை, நட்பிற் குலவேற்றுமை காட்டாமை முதலிய சில பண்பாட்டியல்புகளும், தேவரால் ஆங்காங்குக் கூறப்படு கின்றன. |
| "செய்கபொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கும் எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும் ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருள்மற் றல்லபிற பொருளே." | 497 |
இது பொருள். |