பக்கம் எண் :

78தமிழியற் கட்டுரைகள்

     "மாசித் திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப்
பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக்
கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்."
(2929)
     இது கலித்துறை.
     "கருங்கொடிப் புருவ மேறா கயல்நெடுங் கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறும் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்"

(658)

     இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
     "மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம
மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில்
பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங்
குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட
விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப
முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக்
கண்கனிய நாடகங்கண் டமரர் காமக்
கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே."
(3138)
     இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
     "புன்காஞ்சி ... ... ... இளவேனில்."

(648)

     "தண்காஞ்சி ... ... ... இளவேனில்."

(649)

     "குறுத்தாள் ... ... ... இளவேனில்."

(650)

     இவை தாழிசைக் கொச்சகம்.
     இங்ஙனம், தேவர், நவில்தொறும் இன்பம் பயக்கும் பல்வகைச் செய்யுளும், அவ்வப் பொருட்கேற்ப வேவ்வேறோசை பட அச்சில் வார்த்தாற்போல அழகாக யாத்திருக்கின்றனர்.
(4) அணித்திறம்:
     "மடமா மயிலே ... ... ... சோர்ந்தனளே."

1526

என்பது தலைசிறந்த தன்மையணி.
     "சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே."

53

     இஃது அரிய உவமை.