கற்புடை மனைவியின் கண்ணியம் | ஓரறிவுயிர்முதல் ஆறறிவுயிர்வரை எல்லா வுயிர்களும் பெரும் பாலும் ஆண் பெண் என்னும் இருபாலின. இவ் விருபாலுள் எது சிறந்தது என்னும் வினாவிற்கு விடையிறுப்பது அரிதாகும். ஆணும் பெண்ணு மாகப் படைக்கப்பட்ட எல்லா வுயிர்களும் இருபாலுங் கூடிவாழ்வதே இறைவன் திருநோக்கமாதலானும், அக் கூட்டு வாழ்க்கையானேயே உலகம் இடை யறாது இயங்கிவருதலானும், அவ் வாழ்க்கையில் இருபாலும் ஒன்றுக் கொன்று துணையாய் ஒத்த உரிமைய வாதலானும், ஒவ்வொன்றும் ஏனைய தாற் செய்யப்படாத ஒருசார் கடமையை மேற்கொண்டுள்ளமையானும், இருபாலும் சமம் என்பதே கொள்ளத்தக்கதாம். இக் கருத்துப் பற்றியே, முதற்றாயான ஏவாள், முதற்றந்தையான ஆதாமின் (அடியு முடியு மல்லாது இடைப்பட்ட) விலாவெலும்பினின்று உண்டாக்கப்பட்டதாகக் கிறித்தவ மறை கூறும். | "பெருமையும் உரனும் ஆடுஉ மேன" | "அச்சமும் நாணும் மடனுமுந் துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப" | | (தொல். களவு, 7. 8) | என்று கூறியது, களவொழுக்கத்தில் தலைவன் தலைவியிடத்துச் சிறந்து தோன்றும் குணங்களேயன்றி, இருபாலுக்குமுள்ள ஏற்றத்தாழ்வன்று. இக் குணங்கள் என்றுமுள்ளனவாயின், களவியலிற் கூறப்படாது இருகை கோளுக்கும் பொதுவான அகத்திணையியல் அல்லது பொருளியலிற் கூறப்பட்டிருத்தல்வேண்டும்: அங்ஙனம் கூறப்படாமை காண்க. | களவு வெளிப்பட்டு மணநிகழு மட்டும் பகற்குறி இரவுக்குறி ஆகிய இருவகைக் குறியிலும் தலைவன் சிறிதும் அஞ்சாது பெருமையோடும் உரனோடும் சென்று மீள்வதும், தலைவிக்குத் தலைவன் மீதுள்ள அன்பு காரணமாக ஆற்றருமைபற்றி அச்சந் தோன்றுவதும், காமக்குறிப்பு அல்லது களவு வெளிப்பாடுபற்றி நாணம் பிறத்தலும், செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய அறியாமடமும், கூட்டத்தை நிகழ்த்தியிருந்தும் அறியாதது போன்ற அறிமடமும் நிகழ்வது முண்டு. தலைவனுக்கு மக்களும் விலங்கும் நச்சுயிரும் ஆகியவற்றால் நேரக்கூடிய சேதத்துடன், அவன் தெய்வத்தை நோக்கியிட்ட சூளுரைப் பொய்ப்பால் வரக்கூடிய ஊற்றுக்கும் தலைவி அஞ்சியிருந்தமை, | | |
|
|