கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வருகின்றன. சிறந்த உரைநடைக்கு அமையவேண்டிய நல்ல இயல்புகளை அவர் பின்வருமாறு கூறுகின்றார்: “உரை நடை எழுதுபவர் முதலாவதாக, கேட்போர் செவிக்கு இனிமையும், விழுமிய ஓசையும் பயக்கும் சொற்களை எடுத்தாள வேண்டும். இரண்டாவதாக, கற்பவர் வாய் மணக்கும் வகையில் இன்னிசையோடு தொடர்களை அமைக்க வேண்டும். மூன்றாவதாக, சிறந்த கருத்துக்களை அழகாகவும் முறையாகவும் வெளியிட வேண்டும். இறுதியாக, பொருத்தமும் தெளிவும் பெற்று நெஞ்சத்தில் ஆழப்பதியும் இயல்புடைய சொற்களைக் கையாளுவதில் வல்லவராக விளங்கவேண்டும்.”1 உரையாசிரியர்களின் நடை, பல்வேறு வகையாய் உள்ளன. ஒவ்வொருவரும் தமக்கென்று சில இயல்புகளை வளர்த்து, சில வரம்புகளை ஏற்படுத்திக் கொண்டு தம்தம் தனிச் சிறப்புக்களை நிலைநாட்டிச் செல்கின்றனர். நடை என்பதைச் செல்வக் கேசவராய முதலியார் பின்வருமாறு விளக்குகின்றார்: “நூல் நடையின் கூறுகளாவன கருத்தும் சொல்லும் என இரண்டு. கருத்தாவது கருதிய பொருள்; சொல்லாவது அப்பொருளை உரைக்கும் உரை. ஒரு நூலின் நடை சிறந்தது என்பார் குறிப்பாவது, அந்நூல், தான் கருதிய பொருளை உரைக்கும் செவ்வி சிறந்தது என்பதாம். உரிய சொற்கள் உரிய இடங்களில் பொருந்தி நடப்பதே நடை. கருதிய பொருளுக்குரிய சொற்களும் அவற்றிற்குரிய இடங்களில் பொருந்தி நடப்பதே, முற்றுத் தொடர்மொழி என்பதான வாக்கிய நடை”2 பழங்கால உரையாசிரியர்களின் நடை எல்லோருக்கும் விளங்கும் வகையில் இல்லை என்றும், கற்றறிந்தவரும் இடர்ப்பட்டுப் பலமுறை முயன்று கற்றுத் தெளிய வேண்டி இருக்கின்றது என்றும் கூறுவோர் சிலர் உள்ளனர். நடை என்பது எழுதுபவரின் திறமைக்கும் புலமைக்கும் ஏற்றவாறு வேறுபடும்; வெளியிடும் கருத்திற்கும் பொருளிற்கும் தக்கவாறு வேறுபடும்; யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களுக்குத் தக்கவாறு வேறுபடும். ஆதலின், தமிழ்க் கடலில் மூழ்கி அரும்பெரும் 1. First the phrases should be rhythmical and pleasing to the ear, secondly the phrases should be musical in the mouth; thirdly the writer should weave the argument into a patern. both beautiful and logical and lastly, he should master the art of choosing apt, explicit and communicative words. -Robert Louis. Stevenson in “On some Technical Elements of Style.” 2. தமிழ் வியாசங்கள் (1926) பக்கம் 116. |