பக்கம் எண் :

113அறிமுகம்

இருப்பினும் செறிவுமிக்கது. பேராசிரியர் நடை பெருமிதமானது.
நச்சினார்க்கினியர் கருத்து வெளிப்பாட்டில் தம்மை மறந்து ஆரவாரமற்ற
நடையில் எழுதுகின்றார்.”
1

     “வைணவர்களும் சைனர்களும் வடமொழியும் தமிழும் பாதிப்பாதி
கலந்து, மணிப்பிரவாள நடை எழுதினர்; உரைகளும் தத்துவங்களும்
எழுதினர். இவற்றில் ஓர் அழகு உண்டு. ஆனால், இங்கும் சூத்திர
நடையையே காண்கின்றோம்”
2

     ஒவ்வோர் உரையாசிரியரின் உரைநடைக் குரிய சிறப்பியல்புகளைக்
காண்போம்.

இறையனார் அகப்பொருள் உரை

    இறையனார் அகப்பொருள் உரையே தமிழ்மொழியில் தோன்றிய முதல்
உரை நூலாகும். பழந்தமிழ் உரை நடையின் சிறப்பை எல்லாம் இந்
நூலில்தான் காணமுடிகின்றது. எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாக
விளக்குவதிலும், பிறர் கருத்தைக் காரணத்தோடு மறுப்பதிலும்
இவ்வுரையாசிரியரின் திறமை ஒப்புயர்வற்றது. வலிவும் வனப்பும் ஒருங்கே
வாய்ந்த இதன் உரைநடை, தமிழிலக்கியவுலகம் அதற்குமுன் கண்டிராத ஒரு
புதுமையாய் அமைந்தது. இந்த உரைநடையைத்தான் பிற்காலத்தில் தோன்றிய
உரையாசிரியர்கள் அனைவரும் கற்றுத் தேர்ந்து, பின்பற்றினர்.

     இறையனார் களவியல் உரையின் இயல்பை அறியக் கீழுள்ள பகுதி
துணை செய்யும்:

     “தலைமகள், ‘எம்பெருமான் நின்னிற் பிரியேன், பிரியினும்
ஆற்றேனாவல்’ என்கின்றானால், பிரிவு என்பதும் ஒன்று உண்டு போலும்;
கேட்ட தகைமையால் அது தம் காதலரைக் காணாதும் கேளாதும் கையின்
அகன்று மெய்யின் நீங்குவது எனக் கலங்கி, கார் மருங்கின் மின்னுப்
போலவும், நீர் மருங்கின் கொடி போலவும், தளிரும் முறியும் தகைந்து
குளிரும் நளிரும் கவினி எழா நின்றதோர் கவின் பெறு கொடிப்போலும்
காரிகை, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி போலக் காண ஒளி மழுங்கி,


     1. The style of Ilampuranar. the first commentator on Tolkappiam is simple. Cenavaraiyar’s is more elegant and descriptive, though there is not much scope for description in his grammatical writing. The style of Parimelalakar, the commentator on Kural, is very terse though crystal clear. Peraciriyar’s style is dignified. Naccinarkkiniyar uses no tricks of style; he forgets himself in his exposition. - A History of Tamil Literature P. 174

 2. நீங்களும் சுவையுங்கள் (1954) பக்கம் 6.