பக்கம் எண் :

115அறிமுகம்

நடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவரது உரை நடையைக் கூறலாம்.1
இவரது உரை நடைக்கு உதாரணம் கீழே தரப்படுகின்றது:

     “குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பு
என்பது குடிப்பிறத்தல்; அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்;
குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமை என்றார் என்பது; அதனை
ஊராண்மை எனவும் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது ஆள்வினை
எனப்படும். இது தலைமகட்கு ஒப்பது அன்றால் எனின், குடியாண்மை
என்புழி ஆண்மை என்பது இருபாற்கும் ஒக்கும் ஆதலின் அமையும்
என்பது. யாண்டு என்பது ஒத்தவாறு என்னை எனின், பன்னீர் யாண்டும்
பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது,
ஓத்தினுள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பு எனவே படும். ‘உருவு
நிறுத்த காம வாயில்’ என்பது, பெண்மைவடிவம், ஆண்மைவடிவம்
பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய
அன்பு என்றவாறு.” (மெய்ப்-25)

பேராசிரியர் - 2

     திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியரின் உரைநடை
சொல்லோவியம் உடையது; இனிய ஓசை உடையது; செறிவான கருத்தை
எளிய முறையில் தருவது.

     பின்வரும் பகுதி இவரது நடையை விளக்கும்:

     “செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல் என்பது, வெறி விலக்கி
நிற்ப, நீ வெறி விலக்குதற்குக் காரணம் என்னோ என்று கேட்ட செவிலிக்கு
நீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த் தினைக்கிளி கடியா
நின்றோம்; அவ்விடத்து ஒரு யானை வந்து நின் மகளை ஏதஞ் செய்யப்
புக்கது; அது கண்டு அருள் உடையான் ஒருவன் ஓடிவந்து அணைத்துப்
பிறிது ஒன்றும் சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளது உயிர்கொடுத்துப்
போயினான்; அறியாப்பருவத்து நிகழ்ந்ததனை இன்று அறியும் பருவம்
ஆதலான், ‘உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர்’ என்பதனை
உட்கொண்டு இவ்வாறு உள்மெலியா நின்றாள்; இனி அடுப்பது செய்வாயாக
எனத் தோழி அறத்தொடு நில்லா நிற்றல்.” (திருக்கோவையார்-293)


     1. His (perasiriyar’s) style is grammatical graphic and simple. This is the best specimen of elegant and simple prose - V.V.S. Aiyar. Tamil - The Language and Literature (1950) page 4.