பக்கம் எண் :

உரையாசிரியர்கள்116

அடியார்க்கு நல்லார்

     அடியார்க்கு நல்லார் உரைநடை சில இடங்களில் செய்யுள் போல
இருக்கும்; சில இடங்களில் இலக்கியச் சுவை வெளிப்படும்; உணர்ச்சியும்
உயிர்ப்பும் தோன்றும்.

     கீழே உள்ள பகுதி இவரது உரைநடைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்:

     “குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்கு, திகழ் ஒளி ஞாயிற்று ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன் மகள்
நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள், முன்னோன் தன்னைப் பின்னர்
இயற்றிப் பின்னோன் தன்னையும் பெருநம்பியாகு என அன்னவர் தம்மொடு,
தென்னர் செம்பியர் தன்னடி போற்ற தமனிய மண்டபத்துச் சிங்கம் சுமந்த
பொங்கணைமீமிசை உவரித்திரையின் கவரி இரட்ட வேந்தன் இருந்துழிச்
சார்ந்த நிமித்திகன், அடி முதல் முடிவரை நெடிது நோக்கி இன்தோள்
கழியப் பொன்திகழ் உலகம் சேர்த்தி நீ எனச் சேரலற்கு உரைத்து, அவன்
மைந்தரை நோக்கி, ‘நந்தாச் செங்கோல் அந்தமில் இன்பத்து அரசாள்
உரிமை இளையோற்கு உண்டு’ என, உளைவனன் நனி வெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன் கண் எரி தவழ அண்ணலை
நோக்கும்; கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த்தானைச் செங்குட்டுவன்
தன் செல்லல் நீங்கப் பகல் செல்வாயிற்படியோர் தம்முன் அகலிடப்பாரம்
அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்த மில் இன்பத்து
அரைசாள் வேந்தன் ஆயினான் என்பது.”

பரிமேலழகர்

     பரிமேலழகர் உரை நடையின் சிறப்பை வ.வே.சு. ஐயர் பின்வருமாறு
புகழ்கின்றார்.* “பரிமேலழகரின் உரை நடை (நச்சினார்க்கினியர்க்கு மாறாக)
மிகுந்த அழுத்தமும் சில இடங்களில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத
அளவுக்கு சுருக்கமும் வாய்ந்தது. குறிப்பிடத்தக்கதோர் சிறப்பு இவரது
உரைநடையில் உண்டு. உயர்ந்த கவிஞர்களைப்போல இவரது நடையில்
உள்ள செறிவே அச் சிறப்பாகும். இவர் அமைத்த வாக்கியத்திலிருந்து


    * His (Parimelalakar’s) prose, unlike that of Naccinarkiniyar is very tense and in some places too brief to be easily inteligible. There is one thing very remarkable about his style in his commentary. Like the style of the great poet whose work he had taken to annotate, his style also is so much compressed in from that one word in a sentence cannot be removed or substituted without at the same time damaging compactness of style. Not a single word he uses unnecessarily. V.V.S.Aiyar. Tamil - The Language and Literature (1950) Page-42.