பக்கம் எண் :

உரையாசிரியர்கள்118

     வ.வே.சு.ஐயர் நச்சினார்க்கினியர் நடையைப் பின்வருமாறு
பாராட்டுகின்றார்:

     “இவரது நடை எளிமையும் எழிலும் உடையது. சில இடங்களில்
கவிதையாய்ப் பொலியும்; தங்குதடையற்ற உயிரோட்டம் நிறைந்திருக்கும்
நச்சினார்க்கினியரிடமிருந்தே சிறந்த உரைநடை தொடங்கிற்று என்று
நன்றாகக் கூறலாம்.”
1

     நச்சினார்க்கினியர் நடையின் இயல்பை உணரப் பின் உள்ள பகுதி
துணை புரியும்:

     “பரத்தையிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும்
பொழுது கழிப்பி, பிறர்க்குப் புலனாகாமல்  மீளும் காலம் அது (வைகறை)
ஆதலானும், தலைவிக்கும் கங்குல் யாமம் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமை
மிகுதலான் ஊடல் உணர்தற்கு எளிது ஆவதோர் உபகாரம் உடைத்து
ஆதலானும், வைகறை கூறினார். இனித் தலைவி விடியற்காலம் சிறு வரைத்து
ஆதலின் இதனாற் பெரும்பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடல்
நீட்டிப்பவே அவ்வைகறைவழித் தோன்றிய விடியற்கண்ணும் அவன்
மெய்வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல்
கூறினார்.” (அகத்-8)

மணிப்பிரவாள உரை

    மணிப்பிரவாள நடையில் கற்பனை வளனும் உணர்ச்சியும் உடைய
சொல்லோவியங்களைக் காணலாம். குருபரம்பராப்ரபாவம் என்னும் நூலில்
ஆண்டாளின் வரலாறு மிகச் சுவையாகக் கூறப்பட்டுள்ளது. பெரியாழ்வாரும்
ஆண்டாளும் தம் ஊரிலிருந்து திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்ததையும்,
ஆண்டாள் அரங்கநாதர் திருவடியை அடைந்ததையும் இலக்கியச் சுவை
சொட்டச் சொட்டப் பின் வருமாறு கூறுகின்றது:

     “ஆழ்வாரும் திருமகளாரும் அதிப்ரீதியுடன் அங்கிருந்தும் புறப்பட்டு,
திருவரங்கன் திருப்பதியுள் எழுந்தருளினவாறே, ‘சூடிக் கொடுத்தாள்
வந்தாள்! சுரும்பார் குழற்கோதை வந்தாள்! ஆண்டாள் வந்தாள்! ஆழ்வார்
திருமகளார் வந்தார்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!’ தென்னரங்கம்
தொழும் தேவி வந்தாள்! என்று பல சின்னங்கள் பரிமாற எழுந்தருள்வித்துக்
கொண்டு, அழகிய மணவாளன் திருமண்டபத்துள் சென்று நின்று
திருப்பல்லக்கின் பட்டுத் திரையை வாங்க, அப்போதே நாச்சியார்


     1. “His style is simple and fine; The occasional poetic flow, the balance of style, and the unembarrassed flow of diction are outstanding features of his writings and it may well ne said that good prose writing commences with Naccinarkiniyar.” - V.V.S.Aiyar. Tamil Language and literature - Page 41.