பக்கம் எண் :

121அறிமுகம்

     1. கடினமான சந்திகளை விலக்கிப் பிரித்து எழுதி உரை நடையை
எளிமையாக்கினார்.

     2. எல்லோருக்கும் விளங்கவேண்டும் என்பதற்காகப் பேச்சு மொழியை,
(மணிப்பிரவாள உரையாசிரியரைப் போல்) பயன்படுத்தாமல் திருத்தமான
சொற்களையே ஆண்டார்.

     3. ஆங்கிலேயர் உரைநடைக்குப் பயன்படுத்திய நிறுத்தக் குறிகளை
இடமும் பொருளும் அறிந்து பயன் படுத்தினார்.

     4. பெயரெச்சம் வினையெச்சங்களை அடுக்கிக் கொண்டே போய் மிக
நீளமான வாக்கியங்கள் எழுதாமல் சிறு சிறு வாக்கியங்களே எழுதினார்.

     5. பொருள் இயைபு கருதிப் பத்தி பிரித்து எழுதினார்.

     இவரது உரை நடையின் சிறப்பியல்புகளைப் பன்மொழிப் புலவர்
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பின் வருமாறு கூறுகின்றார்:

     “சிறு சிறு வாக்கியங்களின் திட்பம், அவை கோவையாகப் பத்தி
பத்தியாக ஒற்றுமை நயம்பட்டு விளங்கும் நுட்பம், கட்டுரை முழுதும் ஒரே
பொருளாய் அமையும் இனிமை, கருத்தின் தெளிவு, சொற்களின் எளிமை,
அழகு, ஆரவாரம் இல்லாது பிறர் அறியாமல் உள்ளுக்குள்ளேயே அமைந்து
விளங்கும் இலக்கண நயம்” - இவை எல்லாம் இவர் உரைநடையில் உண்டு.

     “இவரது உரை நடையில், உடைநடை ஓவியங்களைக் காண முடியாது.
சிவஞான யோகிகளது சினம் தோன்றினாலும் அதுவும் அடங்கி ஒடுங்கியே
மெல்ல ஊர்ந்து வருகின்றது. இவருடைய நடையில், உணர்ச்சி என்பதற்கே
ஒரு சிறிதும் இடமில்லாமல் இவரது உரை நடை ஓடுகிறது. முதலிலிருந்து
முற்ற முடியும் வரை ஒரே நடைதான்: ஒரு வேற்றுமையும் இல்லை.”
1

     நாவலரின் நடைக்குக் கீழுள்ள பகுதி சிறந்த எடுத்துக் காட்டாய்
உள்ளது:  

     “உலகை வென்ற உத்தமச் சிறுத் தொண்டர், திருத் தொண்டரை
ஊட்டவேண்டி உண்ணப்புகலும் வைரவர் அவரைத் தடுத்து, “ஆறு
மாதத்திற்கு ஒரு முறை உண்ணும் யாம் உண்ணும்  அளவும் பொறுக்காது,
தினந்தோறும் அன்னம் உண்ணும் நீவிர் எமக்குமுன் உண்ணப்புகுதல்
என்னை? நம்மோடு அமுது செய்ய உமக்குப் புத்திரன் இருப்பின் அழையும்”
என்றார். அதற்கு நாயனார் பெருமான், “என் புதல்வன் இங்கு உதவான்”


 1. நீங்களும் சுவையுங்கள் - 202.