முற்காலத்தவர் ஆய்வுமுறை இருவகையாய் அமைந்துள்ளன. ஒன்று: புற ஆய்வு. மற்றொன்று: அக ஆய்வு. இவ்விரு பிரிவுகளிலும் பல உட்பகுதிகள் உள்ளன: ஆய்வு | புற ஆய்வு | மூலம் வகை அமைப்பு மரபு | அக ஆய்வு | பொருள் சுவை அழகு நயம் | குறிப்பு உள்ளுறை இறைச்சி வேறுபொருள் | பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த வள்ளலாய் - கவிபாடும் வித்தகராய் விளங்கிய பொன்னுசாமித் தேவரின் (1837-1870) கவித்திறனை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வியந்து பின்வருமாறு பாடியுள்ளார்: சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும் கற்பனையாச் சொல்லா நின்ற நன்னயமும் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும் எந்நயமும் சிற்சிலவே பிறர்க்கமையும்; நினக்கமைந்த எல்லாம் என்னில், பன்னயமும் உணர்பொன்னுச் சாமிமகி பா ! நினது பாட்டுஎற் றாமே ! எத்தனை வகையில் நயம் நோக்கப்பட்டது என்பதை இந்தப் பாடல் அறிவிக்கின்றது. உரை திறனாய்வே புலமை நூல் என்னும் சிறந்த ஆய்வு நூலை இயற்றியுள்ள வி.நா. மருதாசலக் கவுண்டர், பண்டைய உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் என்றும், உரைகள் யாவும் திறனாய்வு நூல்கள் என்றும் விளக்கியுள்ளார்: “உயர்தர நூல்களெல்லாம், அறிவென்னும் செம் பொன்னால் ஆக்கப்பட்டு இயல்பான உரையாணியால் ஒளி வீசப்படுவன. நூலின் மாற்றினைக் காண்பதற்கு நல்லாசிரியர்கள் |